கிவ் : உக்ரைன் நாட்டில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழு நடத்திய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை ரஷ்யாவுடன் பகிர்ந்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்து அப்பகுதியை தனது நாட்டுடன் சட்டவிரோதமாக இணைந்துக்கொண்டுள்ளது. அதன் பின்னர் உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என அந்த மாகாணங்களில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத குழுக்கள் உருவானது.
உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் இந்த பிரிவினைவாத குழுக்களுக்கு ரஷ்யா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து பிரிவினைவாத குழுக்கள் நேற்று திடீரென்று தாக்குதல் நடத்தினர். 'டிரோன்கள்’ மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டது.
பிரிவினைவாத குழுக்கள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அரசு படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை தாக்குதல் நடைபெற்றது. அப்போது டிபால்ட்சேவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலில், 90 ராணுவ வீரர்களை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்து நினைவு கூறத்தக்கது.
இதனிடையே சமீபத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியில், 2 லட்சம் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள் உட்பட ஏராளமான ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றன. ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள், இந்தப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR