நிலநடுக்கத்தால் இரண்டாய் பிரிந்த கிராமம்! துருக்கி பேரழிவினால் தொடரும் சிக்கல்கள்

Earthquake in Turkey splits this village in two: பிப்ரவரி 6 அன்று துருக்கியைத் தாக்கிய தொடர் பூகம்பங்கள், 45,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றதுடன், ஒரு கிராமத்தையே இரண்டாக்கிவிட்டது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 20, 2023, 01:56 PM IST
  • தொடர் பூகம்பங்களால் இரண்டான கிராமம்
  • துருக்கி நிலநடுகக்த்தின் எதிரொலி
  • 1000 பேர் வசிக்கும் கிராமத்தில் விழுந்தது விரிசல்
நிலநடுக்கத்தால் இரண்டாய் பிரிந்த கிராமம்! துருக்கி பேரழிவினால் தொடரும் சிக்கல்கள் title=

Turkey Earthquake Updates: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த கிராமம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. பிப்ரவரி 6 அன்று துருக்கியைத் தாக்கிய தொடர் பூகம்பங்கள், 45,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றதுடன், ஒரு கிராமத்தையே இரண்டாக்கிவிட்டது. துருக்கி நாட்டில் உள்ள டெமிர்கோப்ரு என்ற கிராமம் இரண்டாகப் பிரிந்தது.

சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் அதிர்ஷ்டவசமாக, யாரும் இறக்கவில்லை என்றும், ஆனால் சிலர் காயமடைந்தனர் என்று AFP  செய்தி வெளியிட்டுள்ளது.

கிராமத்தில் நிலநடுக்கத்தின்போது என்ன நடந்தது?

துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியா முழுவதும் 46,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்கு பிறகு டெமிர்கோப்ரு என்ற சிறிய கிராமம் இரண்டாகப் பிரிந்தது. சனிக்கிழமை (பிப்ரவரி 18) ஹடேயில் ஏற்பட்ட பெரிய விரிசலால் கிராமத்தில் விரிசல் ஏற்பட்டது.  

மேலும் படிக்க | நிலநடுக்கத்தில் 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்

வீடுகள் புதைந்தன
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள வீடுகள் நான்கு மீட்டர் (13 அடி) கீழே இறங்கிவிட்டன. "நிலம் எப்போதும் இருப்பதை விட கீழே இறங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது.  

சீர்குலைந்த தெருக்கள்
மக்கள் ஒரு காலத்தில் நடந்து சென்ற கிராமத் தெருக்களையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இடிபாடுகளின் எச்சமாக இருக்கிறது.  

'பயமாக இருக்கிறது'
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். முதல் நிலநடுகக்த்திற்குப் பிறகு, மக்களை தஞ்சம் புக அதிகாரிகள் குறிப்பிட்டப் பகுதிகளுக்கு கிராம மக்கள் சென்றனர். ஆனால், அந்த இடமும் 7.8 ரிக்டர் அளவு சக்தி கொண்ட நிலநடுக்கத்தைத் தாங்க முடியாமல் விரிசலடைந்தது. இதைப் பார்த்த மக்கள் அச்சமடைந்தனர்.

மேலும் படிக்க | Turkey: 13 நாட்களுக்கு பின் இடிபாடுகளில் புதையுண்ட கணவன் மனைவி உயிருடன் மீட்பு!

மக்களுக்கு தங்குமிடம்  
 மீட்பு முயற்சிகள் பெரும்பாலும் பண்டைய நகரமான அண்டாக்யா மீது கவனம் செலுத்துகின்றன, இது நிலநடுக்கத்தின் பேரழிவு விளைவுகளை எதிர்கொண்ட அந்த நகரம் டெமிர்கோப்ருவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

சேதமடைந்த கட்டிடங்கள் & அழிவுகரமான பின்விளைவுகள்

நிலநடுக்கத்திற்கு பிறகு பூமிக்கு அடியில் இருந்து தண்ணீர் மேலே வந்து, நிலங்களில் மேல் தேங்கி நிற்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.நடைபாதை சாலைகள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. கிராமத்தில் ஏற்பட்ட விரிசில, ஒரு கிராமத்தை இரண்டாக்கிவிட்டது.

மேலும் படிக்க | சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News