பாகிஸ்தானில் ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகும்: ஆய்வுகளின் பகீர் ரிப்போர்ட்

Pakistan Economic Crisis: இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, பிற நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதில் அதிக சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2023, 05:14 PM IST
  • தற்போது பாகிஸ்தானின் உள்நாட்டு கடன் சுமை 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தானின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை ஒரு சதவீதம் அதாவது 100 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
  • பாகிஸ்தானில் உள்ள ஆய்வாளர்களும் கடன் வாங்கும் செலவு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகும்: ஆய்வுகளின் பகீர் ரிப்போர்ட் title=

பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே உள்ளது. டாலருக்கு நிகரான நாட்டின் கரன்சியும் பலவீனமடைந்து வருகிறது. இதற்கிடையில், அதிகரித்து வரும் வெளிநாட்டுக் கடன்களுக்கு மத்தியில், அதிக கடன் அழுத்தத்தில் உள்ள உலகின் 15 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் வந்துள்ளதாக பிசினஸ் ரெக்கார்டரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர் அதீக் உர் ரஹ்மான், 'இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து நாடு கண்டிப்பாக விரைவில் விடுபட வேண்டும்.' என கூறினார். அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், வெளி நாடுகளில் இருந்து பெறப்பட்ட கடனைத் தவிர, உள்நாட்டு கடன் சுமையும் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தானின் உள்நாட்டு கடன் சுமை 21 சதவீதம் அதிகரித்துள்ளது

தற்போது பாகிஸ்தானின் உள்நாட்டு கடன் சுமை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தானின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை ஒரு சதவீதம் அதாவது 100 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஆய்வாளர்களும் கடன் வாங்கும் செலவு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர் அதிக் உர் ரஹ்மான், 2024ஆம் நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார். இதற்கு நேர்மாறாக, 30 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை இன்னும் வட்டியுடன் பாகிஸ்தான் திருப்பிச் செலுத்தவில்லை. பாகிஸ்தானின் நடப்பு கணக்கு குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்! 10 பேர் பலி!

பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைப்பதில் சிரமம்

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, பிற நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதில் அதிக சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பாக்கிஸ்தான் 45 சதவீத குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் மத்தியில், கடன் அழுத்தத்தின் அதிக ஆபத்து மற்றும் மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கும் நாடுகளுக்கு மத்தியில் வைக்கப்படலாம் என பிசினஸ் ரெக்கார்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் ஒரு பயங்கரமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அதீக் உர் ரஹ்மான் கூறினார். எந்தத் தீர்வும் இல்லாமல், நாடு தொடர்ந்து பண நெருக்கடியை சந்திக்கும் என்றும் அது தொடரும் என்றும் பாகிஸ்தானை கூர்ந்து கவனித்து வரும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடயில், மருந்துகளின் விலையை 20% வரை உயர்த்த பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது. அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலை உயர்வின் வரம்பு அதிகபட்சமாக 14% ஆகவும், மற்ற அனைத்து மருந்துகளின் விலை 20% ஆகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத மிக ஏழ்மையான நிலையில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளான கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் எரிபொருளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், எரிபொருளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார். இதில் திரட்டப்படும் பணம் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க | பூஞ்ச் ​​பயங்கரவாத தாக்குதலில் சீன தோட்டக்கள்! பாகிஸ்தானுக்கு உதவுகிறதா சீனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News