Israel Palestine Conflict: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் இன்று 14வது நாளை எட்டியுள்ளது. காசாவை கைப்பற்றாமல் போர் நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் தொடர்ந்து மருத்துவமனை, மக்கள் வசிக்கும் பகுதி, தேவாலயம் என காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் இஸ்ரேல் காசாவில் உள்ள பழமையான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் புனித போர்பிரியஸ் தேவாலயத்தை தாக்கியுள்ளது. இதில் இதுவரை 8 பேர் காயமடைந்து உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பல உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை குறித்து தெரியவரும் ernஎனக் கூறப்பட்டுள்ளது.
காசாவின் இந்த தேவாலயம் சுமார் 900 ஆண்டுகள் பழமையானது. இது 1150 களில் கட்டப்பட்டது. போரின் மத்தியில், இஸ்ரேலிய குண்டுவீச்சுகளில் இருந்து தப்பிக்க குறைந்தது 500 முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேலுக்கு கண்டனத்தை பதிவு செய்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்
ராய்ட்டர்ஸ் ஊடக அறிக்கையின் படி, ஆர்த்தடாக்ஸ் சர்ச் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "காசா நகரில் உள்ள அதன் தேவாலய வளாகத்தைத் தாக்கிய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு ஜெருசலேமின் ஆர்த்தடாக்ஸ் பேட்ரியார்ச்சேட் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் புகலிடம் தேடி வந்த காசா நகரில் உள்ள செயிண்ட் போர்பிரியஸ் தேவாலயத்தை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதாக பாலஸ்தீனத்தின் முக்கிய கிறிஸ்தவப் பிரிவான ஜெருசலேமின் ஆர்த்தடாக்ஸ் பேட்ரியார்ச்சேட் கூறியுள்ளது.
18 கிறிஸ்தவ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் ஹமாஸின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதி இறப்பு எண்ணிக்கை குறித்து தேவாலயத்தில் இருந்து உடனடி தகவல் இல்லை. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்களுக்கு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்ட தேவாலயங்களை குறிவைப்பது "புறக்கணிக்க முடியாத ஒரு போர் குற்றம்" என்று ஜெருசலேமின் ஆர்த்தடாக்ஸ் பேட்ரியார்ச்சேட் சர்ச் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 1,000 கிறிஸ்தவர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆவார்கள்.
சர்ச் மீதான தாக்குதல் குறித்து ஆய்வு -இஸ்ரேல் ராணுவம்
இந்த தாக்குதல் குறித்து, தீவிரவாதிகளின் கட்டளை மையத்தின் மீது தாக்குதல் நடத்தும் போது, எதிர்பாராத விதமாக தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளதாகவும், சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது
நாள் 14 : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனம் மோதல்.. இறப்பு எண்ணிக்கை
பாலஸ்தீனம் சுகாதார அமைச்சகம் தரவுகளின் படி 1500 குழந்தைகள் உட்பட 3785 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அதேபோல இஸ்ரேல் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின் படி, 306 துருப்புகள் உட்பட 1403 இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து இல்லை - பாலஸ்தீனிய மக்கள் வேதனை
பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, காசாவில் கிட்டத்தட்ட 3,800 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தங்களது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
அண்டை நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க ஹமாஸ்-புடின் விரும்புகிறார்கள்
செங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்னி 3 ஏவுகணைகளை இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்களை ஏவியதாக பென்டகன் தெரிவித்துள்ளது. அவர்கள் யேமனில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர், ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை தாக்க திட்டமிட்டுள்ளனர் என்ற அச்சத்தை அமெரிக்கா எழுப்பி உள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (வியாழக்கிழமை) இரவு வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்பொழுது அவர், ஹமாஸ் மற்றும் புடினுக்கு இடையே உள்ள பொதுவான விஷயம் என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்கள் சுற்றி இருக்கும் ஜனநாயக நாடுகளை அழிக்க விரும்புகிறார்கள் என்றார்.
ஒருவேளை அமெரிக்கா யாருக்கும் ஆதரவு தராமல் பின்வாங்கினால், தாக்குதல் நடத்தியவர்கள் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் மற்றவர்களும் இதேபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம், இது உலகின் பல பகுதிகளில் மோதல் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஜோ பைடன் கூறினார்.
இந்த நேரத்தில் எனக்கு மிக முக்கியமான பணி பணயக்கைதிகளாக இருக்கும் அமெரிக்க குடிமக்களை விடுவிப்பதாகும் என்றார். இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவுமாறு பாராளுமன்றத்திடம் முறையிடுவேன் எனக் கூறினார்.
மேலும் படிக்க - ஹமாஸ் குழுவை அழித்துவிடுவேன் - ஆவேசத்துடன் இஸ்ரேல் பிரதமர்! என்ன நடக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ