Video: மீண்டும் பழைய உத்வேகத்துடன் வருகிறது Incredibles!

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வருகிறது Incredibles திரைப்படம்!

Last Updated : May 27, 2018, 12:31 PM IST
Video: மீண்டும் பழைய உத்வேகத்துடன் வருகிறது Incredibles! title=

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வருகிறது Incredibles திரைப்படம்!

சூப்பர் ஹூரோக்களின் வாழ்வினை சித்திரிக்கும் படமாக அனிமேஷன் கதாப்பாத்திரங்களைக் கொண்டு உறுவாகி வெளியான திரைப்படம் இன்கிரிடிபல்ஸ்.

வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டப் போதிலும், இப்படத்திற்கான ரசிகர்கள் குறைந்தப்பாடில்லை. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உறுவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15 நாள் வெளியாகும் இத்திரைப்படம் இந்தியாவில் ஜூன் 22-ஆம் நாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வால்ட் டிஸ்னிப் பிச்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தினை சம்பாதித்த திரைப்படம் இன்கிரிடிபல்ஸ். சூப்பர் ஹீரோக்களுக்கான வேலை நகரத்தில் இல்லா பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு மாறும் என்பது போன்ற கதைக்களத்துடன் ரசிகர்களை ஈர்த்த திரைப்படம். அந்த ஆண்டிற்கான சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதினை பெற்ற திரைப்படம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக காத்திருக்கிறது. வரும் ஜூன் 22-ஆம் திரைக்கு வரும் இத்திரைப்படம் இந்தாண்டின் கோடை விடுமுறை சிறப்பாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தினை குறித்து இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ப்ராட் பேர்ட் தெரிவிக்கையில்... படத்தின் முதல் பாகத்தில் கதாப்பாத்திரம், அவர்களின் கர்பனையாக சக்திகள், வேடிக்கைகள் தான் ரசிகர்களை கவர்ந்தது. இந்த அம்சங்களின் அளவு குறையாமல் இரண்டாம் பாகம் உறுவாகியுள்ளது. நிச்சையம் ரசிகர்களை இப்படம் ஈர்க்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

Trending News