கியேவ்: இந்த முறை ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியது. உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. G20 குழு உச்சிமாநாட்டில், அனைத்து நாடுகளும் ஒருமித்த ஒரு பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. இதன் கீழ், உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யாவைக் கண்டிப்பதை அனைத்து நாடுகளும் தவிர்த்தன. ஆனால் அதே நேரத்தில் அனைத்து நாடுகளும் எல்லையை ஆக்கிரமிக்க பலத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன், இந்த பிரகடன அறிக்கை குறித்து பெருமை கொள்ள ஒன்றும் இல்லை எனக் கூறியுள்ளது.
ரஷ்யாவை விமர்சிக்காதது குறித்து அதிருப்தி
ஜி20 பிரகடன அறிக்கை குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்த அறிவிப்பில் "பெருமைப்பட ஒன்றுமில்லை" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ பேஸ்புக்கில் எழுதினார். உக்ரைன் மீது நடத்தப்படும் யுத்தம் தொடர்பாக ரஷ்யாவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என வெளிவிவகார அமைச்சம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனைத் தாக்குதலை தொடக்கியது. அதன் பிறகு பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவை கண்டிக்காததால் உக்ரைன் கலக்கமடைந்துள்ளது.
மேலும் படிக்க - ஜி20 மாநாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்
உக்ரைனை அழைக்காத இந்தியா
ஜி20 மாநாட்டில் பங்கேற்க, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை இந்தியா அழைக்காதது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக உக்ரைன் ஒவ்வொரு மாநாட்டிற்கும் அழைக்கப்பட்டது. பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் சில நாடுகள் G20 மாநாட்டின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அதை ஆதரித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்த தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாக அவர் கூறினார். நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டை வன்முறையால் கேள்விக்குட்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
பிரதமர் மோடியின் அறிவிப்பு
செப்டம்பர் 9 சனிக்கிழமை மாநாட்டின் முதல் நாள். உச்சிமாநாட்டின் முதல் நாளிலேயே பிரகடனத்தை வெளியிட தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி, அனைத்து அணிகளின் கடின உழைப்பின் அடிப்படையில், ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை பெற்றுள்ளோம்; இந்த பிரகடனம் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 மாநாடு பல தசாப்தங்களாக நினைவுகூரப்படும். புது தில்லி பிரகடனத்தைப் பார்த்தால், அனைத்து உறுப்பு நாடுகளும் இந்தியாவின் யோசனைகளைப் பாராட்டியது மட்டுமின்றி அவற்றுக்கு இடம் கொடுத்தன. ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளும் முகங்களும் வெவ்வேறாகத் தோன்றினாலும் இந்திய மண்ணில் வெவ்வேறு கருத்துக்கள் ஒன்று சேர்ந்து பொதுவான குரலாக மாறியது.100க்கும் மேற்பட்ட விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் யுனெஸ்கோ மாநாடு நடைபெற்றது. சுமார் 64 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜி 20 உச்சி மாநாட்டின் மூலம், இந்தியா நாம் இனி மன்றாடுபவர்களின் தேசம் அல்ல என்பதை உலகுக்கு முன்வைத்தது. இதன் மூலம்தான் இந்தியாவின் கருத்துக்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க | G20 Summit: செப்டம்பர் 9 -10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ