2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகெங்கிலும் ஒரு பில்லியன் சிரிஞ்சுகளை இருப்பு வைக்க ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது. இவை எதிர்காலத்தில் தேவைப்படும்போது கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க பயன்படுத்தப்படும்.
ஐ.நா. குழந்தைகள் நிதியமான UNICEF, இந்த ஆண்டு இறுதிக்குள் 520 மில்லியன் சிரிஞ்சுகளை அதன் கிடங்குகளில் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தடுப்பு மருந்து கிடைப்பதற்குள் நாடுகளில் ஆரம்ப கட்ட விநியோகத்திற்கு உதவும் வகையில் சிரஞ்சுகளுக்கான ஏற்பாடு செய்யப்படும்.
பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகளுக்காக ஐந்து மில்லியன் பாதுகாப்பு பெட்டிகளையும் வாங்குவதாக UNICEF தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) உருவாக்கிய சர்வதேச கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கொள்முதல், உற்பத்தி மற்றும் விநியோக அமைப்பான Covax இந்த சிரிஞ்சுகளை பயன்படுத்தும்.
Covax, Gavi vaccine alliance-ஆல் இயக்கப்படுகிறது. இது சிரிஞ்சுகளுக்கான தொகையை UNICEF-க்கு அளிக்கும்.
ஒரு பொது-தனியார் கூட்டாண்மையான Gavi, உலகின் 50% குழந்தைகளுக்கு உலகின் சில ஆபத்தான நோய்களுக்கு எதிராக தடுப்பு மருந்து போடுவதில் உதவுகிறது.
ALSO READ: இந்தியா தற்போது COVID-19-ன் சமூக பரவல் நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் Harsh Vardhan
சிரிஞ்சுகளை ஐந்து வருடங்களுக்கு சேகரித்து வைக்கலாம். இவை கப்பல்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இவை தடுப்பு மருந்துகளைப் போல் உணர்திறன் கொண்டவை அல்ல. அதிக வெப்பத்தால் கெட்டு விடும் சாத்தியக்கூறுகள் உள்ள தடுப்பு மருந்துகள் விரைவில் இலக்கை சென்றடைய விமானங்கலில் அனுப்பப்படுகின்றன.
தட்டம்மை மற்றும் டைபாய்டு போன்ற நோய்களுக்கு எதிரான பிற தடுப்பூசி திட்டங்களுக்காக UNICEF வாங்கும் 620 மில்லியனுக்கு மேல் பில்லியன் சிரிஞ்சுகள் சேர்க்கப்படும்.
தற்போது 42 தடுப்பு மருந்துகளுக்கான (Vaccine) பரிசோதனைகள் மனிதர்கள் மீது செய்யப்பட்டு வருவதாகவும் அதில் 10 மருந்துகளின் சோதனை மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெகுஜன சோதனையில் உள்ளன என்றும் WHO கூறுகிறது.
மொத்தமாக பரிசோதிக்கப்படும் தடுப்பு மருந்துகளில் சுமார் 10 சதவீத மருந்துகளே வெற்றியடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்களின் அடிப்படையில், உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுகளின் எண்ணிக்கை திங்களன்று 40 மில்லியனைக் கடந்தது. உலகம் முழுவதும் 1.1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.
ALSO READ: மனிதர்களின் தோலில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR