கர்நாட்டக தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!
234 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் கடந்த மே 12-ஆம் நாள் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் இத்தேர்தலில் 72.13% வாக்குகள் பதிவாகின.
இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று. இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தேறியது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் குறைவான இடங்களிலேயே (78 தொகுதிகளில்) வெற்றிப் பெற்றது. அதற்கு மாறாக பாஜக அதிக இடங்களில் (104 தொகுதிகளில்) வெற்றியை குவித்தது. இவர்களுக்கு இடையில் மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களை பெற்று ஆட்சியில் இடம்பிடிக்கும் இடத்திற்கு உயர்ந்தத்து.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் சித்தராமையா தனது சொந்த தொகுதியான சாமூண்டேஸ்வரி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
மூன்று கட்சிக்கும் தனி பெருன்பான்மை கிடைக்காத நிலையிலும், பாஜக-வினை ஆட்சியில் அமரவிட கூடாது என்ற நோக்கிலும் காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய தலைவர்கள் ஒன்றுகூடி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கடிதத்தினை அளித்துள்ளனர்.
In 2019 we will not only form the govt under the leadership of Modi Ji but also form a New India in 2022: Amit Shah pic.twitter.com/6le87AiRVg
— ANI (@ANI) May 15, 2018
அதேவேலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவும் அட்சியமைக்க ஆளுநரிடம் கடிதத்தினை அளித்துள்ளார். கர்நாடகாவில் யார் முதல்வர் ஆவார் என குழப்பம் நிலவி வரும் நிலையில் வரும் மே 28 ஆம் நாள் இதற இரண்டு தொகுதிகளுக்கு (ராஜேஷ்வரி நகர், ஜெய்நகர்) தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி முதல்வரை தீர்மாணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தாங்களே அதிக பெருன்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ளாதாய் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆட்சி அமைக்கப் போவது தாங்கள் தான் எனவும் உறுதி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கர்நாட்டக பொதுமக்களுக்கு நன்றி என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!