ஆஸி., இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸி., சாம்பியன் பட்டம் வென்றது!
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதிய முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வந்தது. இத்தொடரில் இங்கிலாந்த் அணியும் ஆஸ்திரேலியா அணியும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இந்நிலையில் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸி., மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முடிவில் ஆஸி., அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி., நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 209 ரன்கள் குவிந்தது. ஆஸி., அணி தரப்பில் மெக் லேனிங் 88, எலிஸ் விலானி 51 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
Champions!
A big thanks to India for hosting us over the past few weeks and the two teams for a great tri-series! pic.twitter.com/7KfoVtKdoj
— Australian Women's Cricket Team (@SouthernStars) March 31, 2018
பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நதாலி ஸ்கீவர் 50, டேனியல் வியாட் 34 ரன்கள் எடுத்தனர். இதனால் ஆஸி., அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகி விருதை ஆஸி., அணியின் மெக் லேனிங் பெற்றார்!