1GB அதிவேக இலவச தரவை வழங்கும் ஏர்டெல்.... இது யாருக்கெலாம் கிடைக்கும்...

ஏர்டெல் 1GB தரவை இலவசமாக அளிக்கிறது, மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு சலுகைகளையும் வழங்குகிறது..!

Last Updated : Aug 12, 2020, 01:52 PM IST
1GB அதிவேக இலவச தரவை வழங்கும் ஏர்டெல்.... இது யாருக்கெலாம் கிடைக்கும்...   title=

ஏர்டெல் 1GB தரவை இலவசமாக அளிக்கிறது, மேலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு சலுகைகளையும் வழங்குகிறது..!

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதிய ஏர்டெல் (Airtel) தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் இப்போது தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 1GB அளவிலான அதிவேக இலவச டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்ட பலன்களை மூன்று நாட்களுக்கு சோதனை முறையில் இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறிப்பாக தங்களது ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

ஏர்டெல் வழங்கும் இந்த சலுகை குறித்த தகவலின் ஸ்க்ரீன் ஷாட்டை ஒன்லிடெக் (OnlyTech) தளம் பகிர்ந்துள்ளது. மேலும் நன்மைகளைப் பெற ப்ரீபெய்ட் வாடிக்கையாளரை வரம்பற்ற பேக் உடன் கணக்கை ரீசார்ஜ் செய்யும் படி அதில் குறிப்பிடபட்டுள்ளது. ஒரு ஏர்டெல் எண் ஒரு மாதத்திற்கும் மேலாக ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்தால் இந்த சலுகை கிடைப்பதாக தெரிகிறது. கடந்த மாதமும், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு இலவசமாக 1GB தரவை வழங்கியது. 

ALSO READ | தினமும் 2GB தரவு... அட்டகாசமான ப்ரீபெய்டு திட்டங்களின் பட்டியல் இதோ!!

இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு இது தோராயமாக வெளிவருகிறது மற்றும் பாரதி ஏர்டெல் ஒரு குறுஞ்செய்தி மூலம் பயனர்களுக்கு தெரிவிக்கிறது. ரூ.48 டேட்டா பேக் கொண்ட ப்ரீபெய்ட் கணக்கில் ரீசார்ஜ் மூலம் மொத்தம் 4 GB டேட்டா கிடைத்தது. உண்மையில், இந்த பேக் 3GB மட்டுமே வழங்குகிறது, மேலும் கூடுதல் 1GB தரவுக்குப் பிறகு, பெறப்பட்ட மொத்த தரவு 4GB ஆகும்.

நேற்று, ஏர்டெல் புதிய ஆப்டிக் ஃபைபர் இணைப்புடன் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் ‘அல்ட்ரா-ஃபாஸ்ட் 4G’ சேவைகளை அறிமுகப்படுத்தியது. 4G சேவைகளை அதிகரிக்க சென்னை மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை இணைக்கும் நீர்மூழ்கி கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கடல் மற்றும் நிலம் முழுவதும் தொலைதொடர்பு சிக்னல்களை அனுப்ப நில அடிப்படையிலான நிலையங்களுக்கு இடையில் உள்ள கடற்பரப்பில் நீர்மூழ்கி தகவல் தொடர்பு கேபிள் வைக்கப்பட்டுள்ளது.

Trending News