Diwali Bonus For Chennai Metro Employees: இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அனைவரும் தீபாவளிக்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கிடையில், அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்களும் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பையும் பெற்று வருகிறார்கள். இந்த பட்டியலில் சமீபத்தில் சென்னை மெட்ரோ ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள்
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.15,000 -ஐ அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) நிறுவப்பட்டதில் இருந்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த போனஸ் 2023-24 நிதியாண்டில் குறைந்தபட்சம் ஆறு மாத சேவையை முடித்த ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முழு ஆண்டு சேவை செய்தவர்கள் முழுத் தொகையையும் பெறுவார்கள். மற்றவர்கள் தங்கள் பணிக்காலத்தில் அடிப்படையில் விகிதாசார போனஸைப் பெறுவார்கள் என்று CMRL தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் தீபாவளி பரிசு
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசாக, சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனசை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினிடம் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் முன்பு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தவிர, அரசு ஊழியர் சங்கங்கள், குழுக்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இடையில், 3 மாதங்களுக்கு ஒரு முறையும், அரசாங்க துறைகளுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டங்கள் நடக்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், தமிழக மாநில அரசு ஊழியர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வந்துள்ளன. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கும், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் 20 சதவிகித கூடுதல் ஊதியம் மற்றும் கருணைத் தொகையை மாநில அரசு அறிவித்தது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் அறிவிக்கப்பட்டது. அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு, மாநில அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ரூ.1931 கோடி கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ