Pensiners Latest News: அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓய்வூதியதரர்களுக்கான முக்கியமான அப்டேட் ஒன்று வந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்:
உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் வரும் DoPPW, இது தொடர்பாக ஒரு குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த அலுவலக குறிப்பாணையின்படி, புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள், அத்தகைய வழக்குகளைக் கையாள்வதற்கான தெளிவான செயல்முறையை வழங்குகின்றன. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தேவை இல்லாத பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.
தேவையான ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இயலாத ஊழியர்களுக்கான ஓய்வூதிய கோரிக்கைகளை செயலாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் முதலில் 28 அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்டன. எனினும், இந்த விதிகள் தொடர்ந்து பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், இவற்றின் அம்சங்கள் இப்போது மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
"மேற்கண்ட விதிகள் அமைச்சகங்கள் / துறைகளால் கண்டிப்புடன் பின்பற்றப்படவில்லை என்பதும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / குடும்ப உறுப்பினர்களிடமிருந்து குறைகள் பெறப்படுவதும் கவனிக்கப்படுகிறது" என்று அலுவலக குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | EPF கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ
CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் அடிப்படையில் உள்ள இந்த வழிகாட்டுதல்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஓய்வூதிய கிளெய்ம்களைப் பெறுவதற்கான செயல்முறையை கோடிட்டுக் காட்டுகின்றன. கிளெய்ம்கள் குறிப்பிட்ட விதிகளின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது (ஆரம்ப உரிமைகோரல்களுக்கான விதி 57(3) மற்றும் மேலும் செயலாக்கத்திற்கான விதி 59(2) மற்றும் விதி 80(5).
DoPPW இது தொடர்பாக முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது:
- DoPPW, இந்த வழிகாட்டுதல்கள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து அமைச்சகங்களையும் துறைகளையும் வலியுறுத்தியுள்ளது.
- மேலும் குறைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, கீழ்நிலை அலுவலகங்கள் உட்பட அவர்களது அலுவலகங்களில் ஓய்வூதியம் தொடர்பான விஷயங்களைக் கையாளும் பணியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சீரான மற்றும் சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வழிகாட்டுதல்கள், தாமதங்கள் அல்லது சிக்கல்களைத் தடுக்க இந்த நடைமுறைகளுக்கு இணங்குமாறு அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நினைவூட்டப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ