நம் அனைவருக்கும் நமது வாழ்வில் அவ்வபோது பல தேவைகள் ஏற்படுகின்றன. இவற்றை பூர்த்தி செய்ய , சில சமயம் நம்மிடம் போதுமான நிதி இருப்பதுண்டு. சில சமயம் அதற்காக கடன் வாங்குகிறோம். குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு வாங்குவது என வாழ்வில் இப்படி பல தேவைகள் ஏற்படும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால், இதற்கு பல விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் அவ்வப்போது அவசர நிதி வசதியை உங்களுக்கு அளிக்கும்.
இது தவிர, தனிநபர் கடனும் எடுக்கலாம். நீங்கள் பிபிஎஃப் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தாலும், கூடுதல் நிதி உங்களுக்கு எளிதாகக் கிடைக்கும். இந்த பதிவில் கூடிதல் நிதியை கடனாக எங்கு பெறுவது உங்களுக்கு மலிவானதாகவும் எளிதானதாகவும் இருக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தனிப்பட்ட கடன்
தனிநபர் கடன், அதாவது பர்சனல் லோன் பற்றி பேசுகையில், அதில் ஆவணங்கள் தேவைப்படும். இது தவிர, கூடுதல் KYC (அடிஷனல் KYC) செயல்முறையும் இதில் இருக்கும். இதற்கு 3-4 நாட்கள் ஆகலாம். உங்கள் CIBIL மதிப்பெண்ணைப் பொறுத்து வட்டி விகிதம் 10-24 சதவீதம் வரை இருக்கும். தனிநபர் கடனுக்கான செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 2.5% வரை இருக்கலாம். கடன் தொகை உங்கள் சம்பளத்தைப் பொறுத்தது. நீங்கள் முன்கூட்டியே பணம் (ப்ரீமேமண்ட்) செலுத்தினால், நிலுவையில் உள்ள தொகையில் 3-4 சதவீதம் வரை செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு கடன்
கிரெடிட் கார்டிலும் கடன் கிடைக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தது. சில சமயங்களில் ப்ரீ-அப்ரூவ்ட் லோன் வசதியும் கிடைக்கும். இதற்கான வட்டி விகிதம் 11-24 சதவீதமாக இருக்கும். செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 2-3% ஆக இருக்கும். கடன் வரம்பை பொறுத்து குறைந்தபட்சம் 25 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் இருக்கும். முன்கூட்டியே கடனை செலுத்தும் போது, அதாவது ப்ரீபேமண்ட் செய்யும்போது, அவுட்ஸ்டேடிங்க் தொகையில் 2-4% அபராதம் விதிக்கப்படுகின்றது.
மியூச்சுவல் ஃபண்ட் கடன்
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்குகளில் முதலீடு செய்திருந்தாலும் கடன் பெறலாம். இதில் KYC தேவையில்லை. வட்டி விகிதம் 9-14 சதவீதமாக இருக்கும். செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 1% வரை இருக்கும். குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். முன்கூட்டியே செலுத்துவதற்கு, அதாவது ப்ரீபேமண்ட் செய்வதற்கு இதில் கட்டணம் இல்லை.
பிபிஎஃப் கடன்
நீங்கள் பிபிஎஃப் அதாவது பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தாலும் கடன் வசதி கிடைக்கும். இதில் KYC தேவையில்லை. வட்டி விகிதம் தற்போது 8.1 சதவீதமாக உள்ளது. இந்த கடனுக்கு கடன் செயலாக்க கட்டணம் பொருந்தாது. உங்கள் PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 25% வரை கடன் கிடைக்கும். இதிலும் முன்னரே கடன் தொகையை செலுத்த, அதாவது ப்ரீ-மேமண்ட் செய்ய கட்டணம் இல்லை.
தங்க கடன்
வங்கிகள் தங்கத்தின் மீது கடன் கணக்கை வழங்குவதால் தங்கக் கடன் பாதுகாப்பான கடனாகக் கருதப்படுகிறது. அத்தகைய கடனைப் பெறுவதற்கு அதிக நேரம் எடுக்காது. இதற்கான செயல்முறையும் எளிதானது. பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி வங்கிகள் தங்கத்தின் மீதான பணத்தை கடனாக வழங்குகின்றன. இருப்பினும், கடன் வழங்கும் வங்கிகள் தங்கத்தின் தற்போதைய மதிப்பைக் கணக்கிட்ட பின்னரே கடன் தொகையை வழங்குகின்றன.
மேலும் படிக்க | Employee Pension Scheme: ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ