சிறுசேமிப்புத் திட்டங்கள்: சிறுசேமிப்புத் திட்டங்கள் அல்லது தபால் நிலையத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிதி அமைச்சகம் ஏப்ரல் 2023 முதல் சிறுசேமிப்பு திட்டங்களின் சில விதிகளை திருத்தியது. அந்த விதிகளின்படி நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால், உங்கள் சிறுசேமிப்புத் திட்டங்கள் ஃப்ரீஸ் செய்யப்படலாம், அதாவது முடக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், கணக்கை மீண்டும் திறக்க விதிகளை பின்பற்ற வேண்டும். இதற்கு முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் 30 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. நிதி அமைச்சகத்தின் இறுதி எச்சரிக்கையை புறக்கணிப்பவர்கள் அக்டோபர் 1 முதல் சிக்கலை சந்திக்க வேண்டி வரும். ஏப்ரல் மாதத்திலேயே நிதி அமைச்சகம் இந்த விதிகள் குறித்து தெரிவித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதலீட்டுக்கு பான்-ஆதார் கட்டாயம்
பிபிஎஃப் (PPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana), தபால் அலுவலக திட்டம் (Post Office Scheme), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Saving Scheme) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் KYC ஆக பேன்-ஆதாரை வழங்குவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் கணக்கைத் திறந்த போது இந்த இரண்டு ஆவணங்களையும் கொடுக்கவில்லை என்றால், இப்போது அதை வழங்க உங்களுக்கு செப்டம்பர் 30 வரை மட்டுமே நேரம் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் மார்ச் 31, 2023 அன்று வெளியிட்டது. அதன் படி சிறு சேமிப்புத் திட்டத்தில் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தொடர்பாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பு மத்திய அரசின் விதிகளின்படி ஆதார் இல்லாமலும் முதலீடு செய்யலாம் என்று இருந்தது, அது இப்போது மாற்றப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்
இனிமேல் மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் கார்டு-பான் கார்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றால், ஆதார் பதிவு எண் மூலமாகவும் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீடு செய்தால் பான் கார்டு வழங்குவது கட்டாயம் என்று அந்த அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சிறு சேமிப்புக்கான புதிய விதிகள் என்ன?
நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சிறுசேமிப்புத் திட்டத்தின் சந்தாதாரர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். PPF, SSY, NSC, SCSS அல்லது வேறு சிறு சேமிப்புத் திட்டத்தில் கணக்கைத் திறக்கும் போது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காதவர்களுக்கும் இது பொருந்தும். ஆதார் எண் இல்லாமல் சிறுசேமிப்புத் திட்டத்தைத் தொடங்க விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கிய 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் திட்ட வாடிக்கையாளர் UIDAI இலிருந்து ஆதார் எண்ணைப் பெறவில்லை என்றால், அவருடைய ஆதார் பதிவு எண் கொண்டும் இதை செய்யலாம்.
மேலும் படிக்க | Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு... மாதா மாதம் அசத்தலான வருமானம்
கணக்குகள் முடக்கப்படும்
சிறுசேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கடந்தும் ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண் பகிரப்படவில்லை என்றால், அத்தகைய சந்தாதாரர்களின் கணக்கு முடக்கப்படும். ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு, செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அக்டோபர் 1 முதல் அவர்களது கணக்குகள் முடக்கப்படும்.
பான் எண்ணை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
சிறு சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கணக்கு திறக்கும் போது பான் எண் கொடுக்கப்படவில்லை என்றால், கீழ் வரும் நிலைகளில் கணக்கு தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் அதை அளிக்க வேண்டும்.
1. கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்.
2. ஒரு நிதியாண்டில் கணக்கில் உள்ள அனைத்து வரவுகளின் மொத்தத் தொகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால்.
3. ஏதேனும் ஒரு மாதத்தில் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது பணப் பரிமாற்றம் செய்தாலோ, மொத்தத் தொகை 10,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தாலும் PAN ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த அறிவிப்பில், 'டெபாசிட்தாரர் இரண்டு மாதங்களுக்குள் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்கவில்லை என்றால், கணக்கு அலுவலகத்தில் ஆவணம் சமர்ப்பிக்கப்படும் வரை அவரது கணக்கு முடக்கப்படும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த திட்டங்களுக்கு இந்த விதி பொருந்தும்?
- தபால் அலுவலக நிலையான வைப்பு (FD)
- தபால் அலுவலகம் தொடர் வைப்பு (RD)
- தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS)
- சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)
- தபால் அலுவலக நேர வைப்பு (TD)
- மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள்
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
- கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ