Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ஜூலை 23 அன்று நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பாஜக தலைமையிலான எண்டிஏ அரசின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால், நாடு முழுவதும் இதற்கான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. கடந்த வாரங்களில் நடந்த நிதி அமைச்சக அதிகாரிகளின் கூட்டங்களில் பல துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் துறைகளுக்கான கோரிக்கைகளையும் நிதி அமைச்சக்த்திடம் அளித்துள்ளனர்.
Union Budget 2024: மக்கள் நலத்திட்டங்களுக்கான எதிர்பார்ப்புகள்
இந்த முறை மத்திய அரசு மக்கள் நலனுக்காக, புதிய நலத்திட்டங்களை கொண்டுவரும் என்றும், ஏற்கனவே உள்ள திட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பாக அடல் ஓய்வூதியத் திட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
அடல் ஓய்வூதியத் திட்டம்:
இந்த பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த தொகையை 10,000 ரூபாயாக உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் தலைதூக்கிய எதிர்பார்ப்பு
பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (Atal Pension Yojana) தொகையை அத்கரிக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்தது. இதற்கான அறிவிப்பும் இடைக்கால பட்ஜெட்டில் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது இது தொடர்பான எந்த வித அறிவ்ப்பையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) வெளியிடவில்லை.
அடல் பென்ஷன் திட்டத்தில் கோரப்படும் மாற்றங்கள் என்ன?
- அடல் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, பல மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
- இதில் உத்தரவாதத் தொகையை அதிகரிக்க வெண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று.
மேலும் படிக்க | குஷியில் விவசாயிகள்... பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் PM Kisan உதவித்தொகை: ரிப்போர்ட்
- தற்போது, இந்த திட்டத்தின் பயனர்கள் அளிக்கும் பங்களிப்பைப் பொறுத்து, அரசாங்கம் மாதத்திற்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அளிக்கின்றது.
- அடல் ஓய்வூதியத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, 2023-24 ஆண்டில்தான் அதிக அளவிலான பயனாளிகள் இதில் சேர்ந்துள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக கடந்த மாதம் கூறப்பட்டது.
- தற்போதுள்ள தொகையால் காலப்போக்கில் அதன் மதிப்பை தக்க வைக்க முடியாது என்றும் இதன் தொகையை அதிகரிப்பது சிறந்ததாக இருக்கும் என்றும் பிஎஃப்ஆர்டிஏ கருதுகிறது.
APY: சில முக்கிய அம்சங்கள்
- அடல் ஓய்வூதியத் திட்டம் 2015-16ல் தொடங்கப்பட்டது.
- இது PFRDA ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
- APY திட்டத்தில், உறுப்பினர் இறந்தாலோ, அல்லது அவருக்கு ஏதேனும் கடுமையான நோய் ஏற்பட்டாலோ, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் 100 சதவீதத்தை 60 வயதில் எடுத்துக்கொள்ளலாம்.
- வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது, இந்த திட்டத்தின் கீழ், அரசு உத்தரவாதத்துடன், மாதம், 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
- இதன் அதிகட்ச தொகையை பட்ஜெட்டில் 10,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ