Business Idea In Tamil: ஒரு தொழில் வெற்றிகரமாக அமைவதற்கு, தனித்துவமான வணிக யோசனைகளே பெரிய காரணமாக இருக்கும். ஒரு சிலர், நல்ல வணிக யோசனையை வைத்திருப்பர். ஆனால் அதை தொடங்குவதற்கு கையில் அவ்வளவாக பணம் இருக்காது. இதனால் அவர்களால் தொழில் தொடங்குவதில் இருந்து பின்வாங்கலாம். சிலர், தன்னிடம் இருக்கும் வணிய யோசனையை கையில் இருக்கும் முதலீட்டை கொண்டு தொடங்கி, வரும் வருமானத்தை வைத்து பெரிதாக்கி கொள்ளலாம் என்று யாேசிப்பர். கவலை வேண்டாம், கையில் பத்தாயிரம் ரூபாயம் இருந்தாலே நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலை செய்யலாம். அதற்கான ஐடியாக்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஊறுகாய் பிசினஸ்:
பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் ஒரு நல்ல தொழில் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு மிகவும் உகந்த தொழில், ஊறுகாய் விற்கும் தொழில். இந்தியாவை பொறுத்தவரை விதவிதமான ஊறுகாய் பிரியர்கள் உள்ளனர். சாப்பாட்டுடனும், தோசை அல்லது இட்லி உடனும் ஊறுகாயை சேர்த்து சாப்பிடலாம். இதற்கு தேவைப்படுவது ஃப்ரெஷ்ஷான மூலப்பொருட்கள் தேவை. பாட்டி ஊறுகாய், ஏதாவது கிராமத்தின் ஸ்பெஷல் என பெயர் வைத்த ஊறுகாய், அம்மா கைவண்ணம் என்ற பெயரில் ஊறுகாய் என விதவிதமாக ஊறுகாய் விற்கலாம்.
மேலும் படிக்க | ‘இந்த’ தொழிலில் பல லட்சம் லாபம் கிடைக்குமா? அட உண்மை தாங்க..
ப்ளாக் எழுத்தாளர்:
நாளிதழ்கள், இணைப்பிதழ்கள், மாத இதழ்கள் என இதழ்களில் விதவிதமான டிப்ஸ்களையும் செய்திகளையும் படிக்கும் பழக்கம் எப்போதோ மலையேறிவிட்டது. இணையதளத்தில் எழுத்தாளர்கள் பலர் குவிந்து உள்ளனர். ஆன்லைனில் இவ்வாறு தனியாக இணையதளம் தொடங்கி எழுதுபவர்களுக்கு பெயர், Bloggers என்று கூறுவர். இதை தொடங்குவதற்கு சில ஆயிரங்கள் மட்டுமே தேவைப்படும். ஆனால், இதிலிருந்து வருமானம் மிக அதிகம் என்கின்றனர், ஏற்கனவே இதை ஸ்டார்ட் அப் ஆக செய்து வருபவர்கள்.
யூடியூப் குக்கிங் டுட்டோரியல்:
பலரது கையில் எப்போதும் குழந்தை போல் தவழ்ந்து கொண்டிருக்கிறது, ஸ்மார்ட் போன். இல்லத்தரசிகளாக இருப்பவர்கள், பகுதி நேர வேலை பார்ப்பவர்கள் என அனைவருமே யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம். தற்போது அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக இருக்கிறது, யூடியூப் தளம். இதனை ஆரம்பிக்க 10 ஆயிரத்திற்கும் கீழ்தான் தேவைப்படும். சமையலுக்கும் உணவுக்கும் எப்போதும் மார்கெட் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், இது குறித்த வீடியோவிற்கு பார்வையாளர்களும் இருந்து கொண்டே இருப்பர்.
டிபன் சேவைகள்:
பத்தாயிரத்திற்கு கீழ் ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினால், அதற்கு ஏற்றது டிபன் சேவை தொழில்தான். குறிப்பாக பெண்களுக்கு இந்த தொழில் நன்றாகவே கை கொடுக்கும். இதற்கு பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. இதற்கு நன்றாக சமைக்கும் திறனும், இதற்கான மூலப்பொருட்களும் இருந்தாலே போதும். அலுவலங்கங்கள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இதற்கான வியாபரம் நன்றாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ