EPF vs PPF: இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்த வருமானத்தை அளிக்கிறது?

EPF vs PPF: ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது, ​​அவர் தனது இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.  ஆனால், கணக்கு முதிர்ச்சியடையும் வரை பிபிஎஃப் டெபாசிட்களை திரும்பப் பெற முடியாது.  

Written by - RK Spark | Last Updated : May 22, 2023, 05:59 AM IST
  • இபிஎஃப்-க்கு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% பங்களிக்கப்படுகிறது.
  • தற்போது இபிஎஃப் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.15 சதவீதமாக உள்ளது.
  • பிபிஎஃப் முதிர்ச்சியடைய மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும்.
EPF vs PPF: இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்த வருமானத்தை அளிக்கிறது? title=

EPF vs PPF: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) எனப்படும் அரசியலமைப்பு சாரா அமைப்பு ஊழியர்களின் ஓய்வுக்காக பணத்தை சேமிப்பதை ஊக்குவிக்கிறது.  இந்த அமைப்பின் திட்டங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை கொண்டுள்ளது.  இபிஎஃப் என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம், 1952-ன் கீழ் உள்ள முக்கிய திட்டமாகும்.  ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவராலும் இபிஎஃப்-க்கு பங்களிப்பு செய்யப்படுகிறது, அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது இந்த நிதி கிடைக்கும், இதனுடன் சேர்த்து அவர்களுக்கு வட்டியும் வழங்கப்படும்.  தற்போது இபிஎஃப் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.15 சதவீதமாக உள்ளது.  பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மிகவும் விரும்பப்படும் நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.  இது முக்கியமாக ஊழியர்களுக்கு பாதுகாப்பு, வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.  ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது, ​​அவர் தனது இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.  ஆனால், கணக்கு முதிர்ச்சியடையும் வரை பிபிஎஃப் டெபாசிட்களை திரும்பப் பெற முடியாது, இது முதிர்ச்சியடைய மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (இபிஎஃப்) நன்மைகள்:

1) உத்திரவாதமான வருமானம் 

2) வரிப் பலன்

3) நீண்ட கால சேமிப்புத் திட்டம்

4) இபிஎஃப் கார்பஸில் ஈட்டப்படும் வட்டி ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.

5) நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் (இபிஎஃப்) தீமைகள்:

1) வருமானம் குறைவாக உள்ளது.

2) இபிஎஃப் பங்களிப்பை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படுவது.

3) இபிஎஃப் பங்களிப்பு கடினமானது,

4) சிறிய நிறுவனத்திற்குச் சென்ற பிறகு இபிஎஃப் வட்டி நிறுத்தப்படும்.

5) லாக்-இன் காலம் இபிஎஃப், எம்எஃப் அல்லது என்பிஎஸ் ஆகியவற்றின் நீண்ட கால வருமானத்துடன் பொருந்தாமல் இருப்பது.

பொது வருங்கால வைப்பு நிதியின் (பிபிஎஃப்) நன்மைகள்:

1) அரசாங்க ஆதரவு சேமிப்புத் திட்டம்

2) உத்தரவாதமான பலன்கள் 

3) வட்டி அல்லது முதிர்வுத் தொகையின் மீது வரிகள் விதிக்கப்படாது

4) பகுதி திரும்பப்பெறுதல் அனுமதிக்கப்படுவது 

பொது வருங்கால வைப்பு நிதியின் (பிபிஎஃப்) தீமைகள்:

1) லாக்-இன் காலமான 15 ஆண்டுகளை விட குறைவான வட்டி விகிதம்

2) அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ. 1.5 லட்சம் 

3) முன்கூட்டியே திரும்பப் பெறும் விதிகள்

4) கணக்கை முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படவில்லை

மேலும் படிக்க | 8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: ஊதியத்தில் பம்பர் 44% ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News