EPFO Update: பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான விதிகள் என்ன?

EPF Withdrawal: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அவசர காலங்களில், படிவம் 19ஐப் பயன்படுத்தியும் இந்த தொகையை பெறலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 5, 2024, 09:02 AM IST
  • அலுவலக பணிகளில் இருக்கும் ஊழியர்கள் பணத்தேவை ஏற்படும்போது கடன் பெறுகிறார்கள்.
  • ஆனால், பணியில் இருக்கும்போதே பிஎஃப் தொகையில் இருக்கும் பகுதியளவு தொகையை பெற முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
  • சில விசேஷ சந்தர்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னதாகவும் பிஎஃப் தொகையை எடுக்கலாம்.
EPFO Update: பணி ஓய்வுக்கு முன் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான விதிகள் என்ன? title=

EPF Withdrawal: அலுவலக பணிகளில் பணிபுரியும் அனைவரும் மாதா மாதம் இபிஎஃப் கணகில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறோம். அதே அளவு தொகையை நிறுவனங்களும் பணியாளர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்கின்றன. இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் தொகை ஓய்வு காலத்திற்கான முக்கியமான தொகையாக பார்க்கப்படுகின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இபிஎஃப் பங்களிப்புகளை நிர்வகிக்கின்றது.

அலுவலக பணிகளில் இருக்கும் ஊழியர்கள் (Employees) பணத்தேவை ஏற்படும்போது கடன் பெறுகிறார்கள். ஆனால், பணியில் இருக்கும்போதே பிஎஃப் தொகையில் இருக்கும் பகுதியளவு தொகையை பெற முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பணி ஓய்வுக்கு பிறகுதான் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுக்க முடியும் என்பதில்லை. சில விசேஷ சந்தர்ப்பங்களில் ஓய்வுக்கு முன்னதாகவும் பிஎஃப் தொகையை எடுக்கலாம். பணி ஓய்வுக்கு முன்னர் இந்த தொகையை எடுக்க சில விதிமுறைகள் உள்ளன. இவற்றை பின்பற்ற வேண்டியது மிக அவசியமாகும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் பிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்கலாம். அவசர காலங்களில், படிவம் 19ஐப் பயன்படுத்தியும் இந்த தொகையை பெறலாம். 

பிஎஃப் பணத்தை இந்த வழிகளில் எடுக்கலாம்:

- பிஎஃப் தொகையை தேவையின் போது ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வழிகளில் எடுக்கலாம்.

- அவசர தேவைகளின் போது படிவம் 19 -ஐ பயன்படுத்தியும் பிஎஃப் தொகையை எடுக்கலாம். 

- இதன் மூலம் உங்கள் இபிஎஃப் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள தொகையின் ஒரு பகுதியை நீங்கள் எடுக்கலாம்.

- தொகைக்காக விண்ணப்பித்து 20 நாட்களுக்குள் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால், பிராந்திய பிஎஃப் கமிஷனரிடம் புகார் செய்யலாம்.

- பிராந்திய பிஎஃப் அலுவலகத்தின் இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க | Kisan Upaj Nidhi: கேரண்டி இல்லாம கடன்! சூப்பர் ஆஃபர் தரும் அரசு! ஆண்டுக்கு 7% வட்டியில் கடன் வேண்டுமா?

பிஎஃப் தொகையை எடுப்பது எப்படி (How To Apply For EPF Amount)

- ஆன்லைனில் விண்ணப்பிக்க, அனைத்து இபிஎஃப் உறுப்பினர்களும் (EPF Members) EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இபிஎஃப் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

- UAN எண், பாஸ்வர்ட் மற்றும் காப்சா போட்டு லாக் இன் செய்யவும். 

- இதன் பிறகு Online Services tab பிரிவில் ‘Claim’ என்பதை கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் முன் ஒரு டேப் திறக்கும். 

- அதில் உங்கள் சரியான கணக்கு எண்ணை உள்ளிட்டு Verify என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

- வெரிஃபிகேஷன் ஆன பிறகு, நீங்கள் EPFO வழங்கிய விதிகளைப் பின்பற்றி இந்த செயல்முறையை முடிக்க வேண்டும். 

- இதன் பிறகு இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) க்ளெய்மிற்கு விண்ணப்பிக்கலாம்.

பணி ஓய்வுக்கு முன் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்?

- வீட்டுக் கடனை திரும்ப செலுத்த.
- வீடு கட்ட அல்லது வாங்க.
-  மருத்துவச் செலவுகளுக்காக பணம் எடுக்கலாம்.
- திருமணம் செலவுகள்
- கல்வி செலவுகள்
- வேலையின்மை

மேலும் படிக்க | IIFL Finance: நகைகள் மீது கடன் கொடுக்க தடை விதித்த ரிசர்வ் வங்கி! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News