தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
ஐ.டி துறை ஏற்கனவே இதற்கான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக சில நிமிடங்களில் ஆன்லைனில் பான் கார்டைப் பெற்று விடலாம் என்ற வசதி உள்ளது.
நிரந்தர கணக்கு எண் (PAN), விண்ணப்பதாரருக்கு வெறும் 10 நிமிடங்களில் PDF வடிவத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. e-PAN எனப்படும் இந்த மின்-பான் அட்டையும் ஃபிசிக்கல் பான் அட்டையைப் போல பயன்படும். இதுவும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.
இந்த வழியில் PAN கார்டைப் பெற, ஈ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்று, ‘Ínstant PAN through Aadhaar’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘Get New PAN’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்களிடம் ஆதார் எண் கேட்கப்படும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP இன் சரிபார்ப்பிற்குப் பிறகு, e-PAN உங்களுக்கு வழங்கப்படும்.
ALSO READ: EPFO அளித்த பெரிய நிவாரணம்: உங்கள் விவரங்களை நீங்களே அப்டேட் செய்யலாம், விவரம் உள்ளே
பான் கார்டு ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். இந்த ஐந்து பணிகளில் PAN அட்டை அவசியமாக தேவைப்படுகிறது:
1.ரியல் எஸ்டேட்: நீங்கள் ரூ .5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு அசையா சொத்தை வாங்க திட்டமிட்டால், PAN அட்டையை வழங்க வேண்டியது கட்டாயமாக இருக்கும்.
2.கிரெடிட் கார்டு- எந்தவொரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும் PAN கார்டை வழங்குவது கட்டாயமாகும். மேலும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போதும் இதை வழங்க வேண்டும்.
3.காப்பீட்டு பிரீமியம்- நீங்கள் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை டெபாசிட் செய்தால், அந்த தொகை ரூ .50,000 க்கு மேல் இருந்தால், அந்த நிலையில் PAN கார்டு அவசியம் தேவை.
4.ரூ .50,000 க்கு மேல் பரிவர்த்தனைகள்- நீங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், PAN கார்டு மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் இணைப்பது முக்கியம். ஒரே நாளில், பாங்க் டிராஃப்டின் கேஷ் பர்சேஸ், பே ஆர்டர்கள், ரூ.50,000-க்கு மேலான காசோலைகளுக்கு PAN கார்டு தேவைப்படுகிறது.
5.TD அல்லது FD க்கு- நீங்கள் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேலான மதிப்பிலான செக்யூரிடிகளையோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் பத்திரங்களையோ வாங்கினால், PAN கார்டு தேவைப்படும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR