Ration Card Online: இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, அரசாங்கம் இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கியது, அது இன்னும் தொடர்ந்து தான் வருகின்றது.
ரேஷன் கார்டு என்பது மிகவு முக்கியமான ஆவணமாகும். தமிழகத்தில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளுக்கும் ரேஷன் கார்டு கட்டாயமாகும். தற்போது இந்த ரேஷன் கார்டானது ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டது. இந்த கார்டை நாம் பெறுவதும் ஈஸி. ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திரம் உணவுப் பொருட்களை வாங்குவது இயலாத ஒரு விஷயமாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு, அப்ளை செய்த பிறகு முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்த பின்னர் ரேஷன் அட்டை வழங்குவார்கள்.
மேலும் படிக்க | Alert!! ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு.. உடனே இதை செய்யுங்கள்!
சில சமயங்களில் இந்த ரேஷன் கார்டை நாம் தவறுதலாக தொலைத்துவிடுகிறோம். இதற்கு இனி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், ரேஷன் கார்டு தொலைந்து விட்டால், உடனே https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று நீங்கள் தொலைந்த ரேஷன் கார்டு பதிவு செய்ய முடியும்.
தொலைத்துப்போன ரேஷன் கார்டுக்கு பதில் புதிய கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி?
1. முதலில் https://www.tnpds.gov.in/ என்கிற லிங்க்கை ஓபன் செய்யவும். அதன்பின் இதில் உங்கள் பயனாளர் ஐடியை உள்ளிட வேண்டும்.
2. பின்னர் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி ஒன்று வரும்.
3. அதை ஸ்கிரீனில் பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு லாகின் செய்ய வேண்டும்.
4. இப்போது டி.என்.பி.டி.எஸ் ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கத்தை காண்பீர்கள்.
5. பின்னர் இதில் கேட்கப்படும் விவரங்களை படிவு செய்து, அந்த காப்பியை PDF வடிவில் டவுண்லோட் செய்துக் கொள்ள வேண்டும்.
6. இந்த காப்பியை பிரிண்ட்அவுட் எடுத்து, உங்கள் ரேஷன் கார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்களின் எடுத்துக் கொள்ளலாம்.
இதுத் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஆஃப்லைன் முறையில் எப்படி அப்ளை செய்வது
முதலில் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்ப்பிக்கவும். அதனுடன் ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களும் இணைத்துக் கொடுக்க வேண்டும். இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் அத்துடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ