Google Pay வழங்கும் கடன் வசதி... யாருக்கெல்லாம் கிடைக்கும்... கடன் பெறும் வழிமுறை விபரம்!

Google Pay Loan: கூகுள் ஃபார் இந்தியா நிறுவனம் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு பெரும் பயன் தரும். இப்போது பயனர்கள் கூகுள் பே மூலம் கடன் வசதியைப் பெற முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 23, 2023, 09:09 PM IST
  • சிறு வணிகர்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சிறிய கடன்களுக்கு சாசெட் கடன்கள் (sachet loans) என்று பெயரிட்டுள்ளது.
  • சிறு வணிகர்களுக்குக் கடன் வழங்க, DMI Finance உடன் Google Pay கூட்டு சேர்ந்துள்ளது.
Google Pay வழங்கும் கடன் வசதி... யாருக்கெல்லாம் கிடைக்கும்... கடன் பெறும் வழிமுறை விபரம்! title=

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், இந்தியர்களுக்கு பல வசதிகளை அறிவித்துள்ளது. இதில், சிறு வணிகர்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Paytm மற்றும் BharatPe போன்ற நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலாக அமையும். சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் கூகுள் பே அப்ளிகேஷன் மூலம் கடன் (GPay Loan) வழங்கும் வசதியை கூகுள் இந்தியா (Google India) தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் தேவைப்படுவதாக கூறும் கூகுள் இந்தியா, இதன் மூலம், 15,000 ரூபாய் கடன் பெறலாம் எனக் கூறியுள்ளது.

இதற்கு, மிகக் குறைவான ஆவணங்களே தேவைப்படும் மற்றும் அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் சமர்பிக்கும் வசதி உள்ளது. இதற்காக நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த சிறிய கடன்களுக்கு சாசெட் கடன்கள்  (sachet loans) என்று நிறுவனம் பெயரிட்டுள்ளது. பயனர்கள் இந்தக் கடனை Google Pay மூலம் பெறலாம். இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய அளவிலான கடன்கள் அடிக்கடி தேவைப்படும், இதற்கு வங்கிகளில் ஒவ்வொரு முறையும் கடன் பெறுவது கடினம். இதேபோல் நண்பர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்கவும் தர்மசங்கடமாக இருக்கலாம். இதனை கருத்தில் கொண்டு சிறிய அளவில் கடன் வழங்கும் சேவையை (Loan Tips) கொடுக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

சிறு வணிகர்களுக்குக் கடன் வழங்க, Google Pay DMI Finance உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது மட்டுமின்றி, ePayLater உடன் இணைந்து Google Pay வணிகர்களுக்கான கடன் பெறும் வசதியையும் தொடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையை  பயன்படுத்தி, வணிகர்கள் அனைத்து வணிகர்களிடமிருந்து பொருட்களை வாங்கலாம். ‘கூகுள் பே’ டேட்டாபேஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வணிகர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிறுவனம் கடன்களை வழங்கும். இதற்காக, கூகுள் பல வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களுடன் (Non Banking Finance Company) இணைந்துள்ளது. நாட்டில் கடன் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, இந்த துறையில் கால் பதிக்க கூகுள் தயாராகி வருகிறது.

பாக்கெட் கடன் என்றால் என்ன?

Sachet கடன்கள் ஒரு வகையான சிறிய கடன்கள். இது குறுகிய காலத்திற்கு கொடுக்கப்படுகிறது. இவற்றை எளிதாகப் பெறலாம். இந்த கடன்கள் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும். கடன் செலுத்துவதற்கான காலம் 7 ​​நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை. இந்த வகையான கடனைப் பெற, நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்க வேண்டும் அல்லது ஆன்லைனில் விண்ணப்பத்தை நிரப்பலாம். மொத்தத்தில், மற்ற கடன்களைப் போல அதிக ஆவணங்கள், வழிமுறைகள் எதுவும் தேவையில்லை.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான ட்விஸ்ட்: 50% டிஏ, ஊதியத்தில் அதிரடி ஏற்றம்

யாருக்கு கடன் கிடைக்கும்?

தற்போது இந்நிறுவனம் அடுக்கு 2 நகரங்களில் சாசெட் கடன் வசதியை தொடங்கியுள்ளது. 30,000 மாத வருமானம் உள்ளவர்கள் எளிதாக ஒரு பாக்கெட் கடனைப் பெறலாம்.

கூகுள் மூலம் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1 - முதலில் உங்கள் Google Pay for Business செயலியை பதிவிறக்கி திறக்கவும்.

2 - இதற்குப் பிறகு கடன்கள் பகுதிக்குச் சென்று சலுகைகள் என்னும் தாவலைக் கிளிக் செய்யவும்.

3 - அங்கு நீங்கள் விரும்பும் கடன் தொகையைத் தேர்ந்தெடுத்து, ஸ்டார்ட் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

4 - நீங்கள் கிளிக் செய்தவுடன், கடன் வழங்கும் கூட்டாளியின் இணையதளத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.

5- இதற்குப் பிறகு உங்கள் Google கணக்கில் உள்நுழையவும். உங்கள் தனிப்பட்ட விவரங்களையும் அங்கே கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகையை முடிவு செய்து, எந்த காலகட்டத்திற்கு கடன் வாங்கப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

6 - இதற்குப் பிறகு உங்கள் இறுதிக் கடன் சலுகையை மதிப்பாய்வு செய்து கடன் ஒப்பந்தத்தில் ஈ-கையொப்பமிட வேண்டும்.

7 - இவை அனைத்திற்கும் பிறகு, நீங்கள் சில KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் காரணமாக உங்கள் சரிபார்ப்பு நடக்கும்.

8 - இதற்குப் பிறகு, EMI கட்டணத்திற்கு நீங்கள் Setup eMandate அல்லது Setup NACH என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

9 - அடுத்த கட்டத்தில் நீங்கள் உங்கள் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் நீங்கள் கடன் பெறுவீர்கள்.

10 - உங்கள் செயலியின் My Loan பிரிவில் உங்கள் கடனைக் கண்காணிக்கலாம்.

மேலும் படிக்க | 8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News