Income Tax Notice : வருமான வரி துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளதா? என்ன செய்ய வேண்டும்... தெரிந்துகொள்வோம்!

Notice From Income Tax Department : உங்களுக்கும் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதா? இதன் அர்த்தம் என்ன? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் நெருங்கிவிட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 27, 2023, 03:17 PM IST
  • வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவது ஏன்?
  • அறிவுரை அனுப்பியுள்ளோம், அறிவிப்பு அல்ல: வருமான வரித்துறை.
  • ITD இலிருந்து செய்தி வந்தால் என்ன செய்வது?
Income Tax Notice : வருமான வரி துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளதா? என்ன செய்ய வேண்டும்... தெரிந்துகொள்வோம்! title=

Income Tax Dept Notice to Taxpayers 2023 - 2024: 2023 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் நெருங்கிவிட்டது. இதற்கிடையில், வரி செலுத்துவோர் வரித் துறையிலிருந்து வரி தொடர்பான செய்திகளைப் பெற்று வருகின்றனர். இதில், குறிப்பாக இந்த நிதியாண்டில் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனை செய்த, செய்யும் வரி செலுத்துவோரை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. உங்களுக்கும் வருமான வரித்துறையிடம் (Income Tax Department) இருந்து இதுபோன்ற செய்தி வந்துள்ளதா? இதன் அர்த்தம் என்ன? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவது ஏன்?

அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை செய்திகளை அனுப்புவது தெரிய வந்துள்ளது. எஸ்எம்எஸ் மூலம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. 2022-2023 காலகட்டத்தில் செய்யப்பட்ட அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட ஐடிஆர் -ஐ (Revised ITR) நிரப்புமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் இது உண்மையில் வருமான வரித்துறையின் அறிவிப்பா?

அறிவுரை அனுப்பியுள்ளோம், அறிவிப்பு அல்ல: வருமான வரித்துறை

வரி செலுத்துவோரின் வசதிக்காக இதுபோன்ற அறிவுரைகள் அனுப்பப்படுவதாக சமூக ஊடக தளமான X இல் வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வரி செலுத்துவோருக்கு (Taxpayers) அனுப்பப்பட்ட இந்த செய்தி அறிவிப்பு அல்ல, அறிவுரை என்று அது கூறியுள்ளது. ஐடிஆர் -இல் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும் அறிக்கையிடல் பிரிவிலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடு இருக்கும் சந்தர்ப்பங்களில் இது அனுப்பப்படுகிறது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது .

வருமான வரித் துறையின் இணக்கப் போர்ட்டலில் வரி செலுத்துவோர் ஆன்லைனில் தங்கள் கருத்துக்களைத் தெர்விக்கவும், தேவைப்பட்டால் வருமான வரி ரிட்டர்னை மாற்றவும், இன்னும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அதை தாக்கல் செய்யவும் ஒரு வாய்ப்பை வழங்குவதே இந்தத் தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

ITD இலிருந்து செய்தி வந்தால் என்ன செய்வது?

வருமான வரித்துறையின் செய்தி உங்களுக்கு வந்திருந்தால், முதலில் உங்கள் AIS அதாவது வருடாந்திர தகவல் அறிக்கையை (Annual Information Statement) பெறவும். உங்கள் வருமானத்துடன் AISஐ பொருத்தவும். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், திருத்தப்பட்ட வருமானத்தை நிரப்பவும். மேலும் இணக்க போர்ட்டலுக்குச் சென்று பதிலளிக்கவும்.

மேலும் படிக்க | எஸ்பிஐ வட்டி விகிதங்கள் அதிகரித்தன! இன்று முதல் உங்கள் FDக்கு வட்டி எவ்வளவு தெரியுமா?

இணக்க போர்ட்டலை (Compliance Portal) அணுகுவது எப்படி? 

- www.incometax.gov.in/ இ-ஃபைலிங் போர்ட்டலில் லாக் இன் செய்யவும்.

- 'Pending Actions' என்பதற்குச் சென்று, '‘Compliance' என்பதைக் கிளிக் செய்யவும். 

- பின்னர் நீங்கள் ‘e-Campaign Tab’ -ஐ அடைவீர்கள். 

- High Value Transaction-ஐப் பார்ப்பீர்கள். அதிக் உங்கள் தகவலை உள்ளிடவும்.

அதிக மதிப்புள்ள பரிவர்த்தனை என்றால் என்ன? (What is High Value Transaction?)

பரிவர்த்தனை வரம்புக்கு மேலான பரிவர்த்தனைகள் உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் சில உதாரணங்கள் இதோ

- வங்கி வரைவோலை மூலம் வங்கியிலிருந்து ரொக்கமாக பெறும் தொகை - ரூ.10 லட்சம்
- சேமிப்புக் கணக்கில் ரொக்க வைப்பு - ரூ.10 லட்சம்
- நடப்புக் கணக்கு - ரொக்க வைப்பு / திரும்பப் பெறுதல் - ரூ. 50 லட்சம்
- சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் - ரூ.30 லட்சம் 
- பங்குகள், மியூசுவல் ஃபண்டுகள், பத்திர முதலீடு ரொக்கமாக - ரூ.10 லட்சம்
- கிரெடிட் கார்டு பில் கட்டணம் ரொக்கமாக - ரூ. 1 லட்சம்
- கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் - ரூ 10 லட்சம்
- ரொக்கமாக FD வைப்பு - ரூ.10 லட்சம் 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி? 8வது சம்பள கமிஷன்..முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News