புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க பிரதமர் தலைமையிலான அரசு சிந்தித்து வருவதாக ஊகிக்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் தேர்தலில் விவசாயிகளின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.6,000லிருந்து 8,000 ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு பரிசு
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர ஆதரவை 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தகவல்க்ளின்படி, அரசு இந்த திட்டத்தின் தொகையை அதிகரித்தால், 2023-24 நிதியாண்டிற்கான தற்போதைய பட்ஜெட் ரூ.60000 கோடிக்கு கூடுதலாக ரூ.20000 கோடி ஒதுக்கீடு தேவைப்படும்.
இடைக்கால பட்ஜெட்டில் உதவித்தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படுமா?
2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, 2024 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில், பிரதமர் கிசான் சம்மான் யோஜனா நிதியில் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை மோடி அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளது.
தற்போது, இடைக்கால பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது
2019 தேர்தலில் பலனளித்த உத்தி
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட 2019 பட்ஜெட்டில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல், பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனாவை அறிமுகப்படுத்தினார், இது டிசம்பர் 2018 முதல் அமலுக்கு வந்தது. 2019 தேர்தலுக்கு முன், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் விவசாயிகள் ரூ.4,000 பெற்றனர்.
அப்போதும் ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி, இந்தத் திட்டத்தின் மூலம் தேர்தல் பலன்களைப் பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கணிசமான பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதன் அடிப்படையில், மீண்டும் பிரதமர் கிசான் சம்மன் உதவித்தொகையின் தொகை அதிகரிக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.
விவசாயிகளின் வாக்குகளை ஈர்க்கும்விதமாக, 2024-2025-ம் ஆண்டிற்கான குறுவைப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கு நேற்று (அக்டோபர் 18, புதன்கிழமை), மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, 2024-25-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்திற்கான அனைத்து குறுவைப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த ஒப்புதல் அளித்துவிட்டது.
மேலும் படிக்க | கோதுமை MSP ₹150 அதிகரிப்பு; மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அதிகபட்ச உயர்வு
குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
மசூர் பருப்பு - ஒரு குவிண்டாலுக்கு குவிண்டாலுக்கு ₹425
கடுகு - குவிண்டாலுக்கு ரூ.200
கோதுமை - ஒரு குவிண்டாலுக்கு ரூ.150
குங்குமப்பூ - ஒரு குவிண்டாலுக்கு ரூ.150
பார்லி - ஒரு குவிண்டாலுக்கு ரூ.115
பருப்புகள் - ஒரு குவிண்டாலுக்கு ரூ.105
இந்த விலை உயர்வு அதிகரிப்பு, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக நேற்று வெளியான நிலையில், பிஎம் கிசான் உதவித்தொகையும் அதிகரிக்கப்பட்டால், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்.
மேலும் படிக்க | வாழை விவசாயிகளை வாழ வைக்கும் அரசு! திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.50000 மானியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ