NPS vs GPF: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் சமீபத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த திட்டம் மீண்டும் அமலில் வந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் (Old Pension Scheme) பணியாளர்களுக்கான அதிக நன்மைகள் கிடைப்பதால் இதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்கிறது. இது மீண்டும் அமலுக்கு வந்தால் பணியாளர்களின் (Employees) கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி (Take Home Salary) அதிகரிக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
தற்போது செயலில் உள்ள தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ஓய்வூயத்திற்கான பங்களிப்பு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படுவதால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் அதாவது டேக் ஹோம் சேலரி பழைய ஓய்வூதிய திட்ட முறையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்தை ஊழியர்களின் ஸ்லாப்பின்படி கழித்துக்கொள்கின்றன. இது NPS ஐ விட அதிகமாக இருக்கலாம்.
NPS -இல் கழிப்பிற்கான விதிகள் என்ன?
புதிய ஓய்வூதிய அமைப்பின் விதிகளின்படி பணியாளரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியில் (Dearness Allowance) 10 சதவிகிதம் ஓய்வூதிய நிதிக்காக கழிக்கப்படுகிறது. அரசாங்கம் 14 சதவீதத்தை ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் செலுத்துகிறது. இந்த வகையில், ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் (NPS Account) அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் மொத்தம் 24 சதவீதத் தொகை சேமிக்கப்படுகிறது. இதில் பணியாளரின் பங்களிப்பு வெறும் 10 சதவீதம் மட்டும்தான். அரசாங்கம் மீதமுள்ள 14% -ஐ அளிக்கின்றது.
ஒரு உதாரணம் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.50,000 என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் என்பிஎஸ் -க்காக அவரது சம்பளத்தில் 10 சதவீதம் அதாவது ரூ.5,000 ரூபாய் கழிக்கப்படும். இதன் பிறகு அவருக்கு ரூ.45,000 சம்பளம் வரும். இதனுடன் அரசாங்கம் சார்பில் அவரது கணக்கில் 14%, அதாவது ரூ.7,000 டெபாசிட் செய்யப்படும்.
பழைய ஓய்வூதிய முறைப்படி ஓய்வூதிய நிதிக்கான விதி என்ன?
ஊழியர்களின் ஜிபிஎஃப் கணக்கு (GPF Account) பழைய ஓய்வூதிய கணக்காக திறக்கப்படுகின்றது. இதில் ஊழியர்களின் ஊதிய அமைப்பு அதாவது அடுக்குகளுக்கு ஏற்ப தொகை அவரது சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதியின் (General Provident Fund) கீழ் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் குறைந்தபட்ச கழிப்பு 6 சதவீதம் ஆகும். பணியாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் இதில் டெபாசிட் செய்யலாம். இது மொத்த சம்பளத்தில் 100% ஆகவும் இருக்கலாம். இந்த மொத்தத் தொகைக்கு வட்டி அளிக்கப்படுவதுடன் ஊழியர்கள் ஓய்வு பெறும் போது மொத்த தொகையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது
GPF -இல் இந்த கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். ஒரு ஊழியரின் சம்பள அடுக்கு ரூ.50,000 என வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அவரது சம்பளத்தில் குறைந்தபட்ச கழிப்பு 6 சதவீதம் அதாவது 3000 ரூபாயாக இருக்கும். இந்தத் தொகையை கழித்த பின்னர் கையில் கிடைக்கும் ஊதியம், அதாவது டேக் ஹோம் சேலரி 47 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இது NPS -இன் தற்போதைய விதியில் கிடைக்கும் தொகையை விட அதிகமாகும். எனினும் பணியாளர் விரும்பினால் அவர் இந்த ஓய்வூதிய (Pension) தொகைக்கான கழிப்பை அதிகரிக்கலாம். இதன் மூலம் அவருக்கு ஓய்வு பெற்ற பின்னர் அதிக தொகை கிடைக்கும்.
மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு மூலம் அதிக வட்டி பெறுவது எப்படி? ‘இந்த’ வழிமுறைகளை பின்பற்றலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ