பிஎஃப்ஆர்டிஏ என்பிஎஸ் ஓய்வூதியம்: நாட்டின் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. இந்தியாவின் பென்ஷன் ரெகுலேட்டரான பிஎஃப்ஆர்டிஏ, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த் திட்டம் (MARS) என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வர உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இந்த புதிய திட்டத்தை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் செப்டம்பர் 30 முதல் தொடங்கலாம்
பிஎஃப்ஆர்டிஏ தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யாய் கூறுகையில், குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டத்திற்கு இப்போது நாங்கள் தயாராகி வருகிறோம். பிஎஃப்ஆர்டிஏ தனது முதலீட்டாளர்கள் மீது பணவீக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கத்தை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்றார்.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
தற்போது, என்.பி.எஸ்-ல் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம், முதலீட்டாளர்கள் பெரும் தொகையை பெறக்கூடும். என்பிஎஸ்-ன் கீழ் செப்டம்பர் 30 முதல் குறைந்தபட்ச உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்கக்கூடும் என்று பந்தோபாத்யாய் மேலும் தெரிவித்தார்.
இதுவரை எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது?
கடந்த 13 ஆண்டுகளில், தேசிய ஓய்வூதியத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 10.27 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது என்று சுப்ரதிம் பந்தோபாத்யாய் தெரிவித்தார். அதிகரித்து வரும் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க, என்பிஎஸ் முதலீட்டாளர்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
20 லட்சம் சந்தாதாரர்கள்
ஓய்வூதிய சொத்துக்களின் அளவு ரூ.35 லட்சம் கோடி என்று பிஎஃப்ஆர்டிஏ தலைவர் கூறினார். இதில் 22 சதவீதம் அதாவது மொத்தம் ரூ.7.72 லட்சம் கோடி என்பிஎஸ் மற்றும் 40 சதவீதம் ஈபிஎஃப்ஓ இடம் உள்ளது. இத்திட்டத்தில் சேர அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.41 லட்சத்தில் இருந்து 9.76 லட்சமாக அதிகரித்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்றால் என்ன
மத்திய அரசு 2004 ஜனவரி 1 அன்று தனது ஊழியர்களுக்கு என்பிஎஸ் கட்டாயமாக்கியது. இதற்குப் பிறகு அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு என்பிஎஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டன. 2009 இல், இந்தத் திட்டம் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் திறக்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு, ஊழியர்கள் என்பிஎஸ்- இன் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். வழக்கமான வருமானத்திற்காக மீதமுள்ள தொகையிலிருந்து ஆன்யுட்டி எடுத்துக் கொள்ளலாம். 18 முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | EPFO new rules: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ