விஜய் மீது முட்டை அடிப்போம்! ரஜினி ரசிகர்கள் ஆவேசம்! இணையத்தில் வலுக்கும் சண்டை!

விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை அடிப்போம் என்று ரஜினி ரசிகர்கள் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Feb 10, 2025, 02:06 PM IST
  • விஜய் மீது முட்டை அடிப்போம்.
  • ரஜினி ரசிகர்கள் சர்ச்சை பேச்சு.
  • இணையத்தில் வலுக்கும் சண்டை.
விஜய் மீது முட்டை அடிப்போம்! ரஜினி ரசிகர்கள் ஆவேசம்! இணையத்தில் வலுக்கும் சண்டை! title=

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தற்போது மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். தனது கடைசி படமான 69 ஆவது படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளர்கள் நியமனம் நடைபெற்று முடிந்தது. மேலும் தேர்தலுக்கான வேலைகளையும் இப்போது இருந்தே  தொடங்கியுள்ளனர். இது தவிர மக்கள் பிரச்சினைகளிலும் விஜய் நேரடியாக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வரப்போகும் மகிழ்ச்சியான செய்தி..! ரெடியா மக்களே

ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சண்டைகள் நடந்து வருகிறது. விஜய்யை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் ரஜினி மேடையில் பேசிய சில வார்த்தைகள் விஜய்யை  தாக்கி தான் பேசினார் என்று ரஜினி மீதும் விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். விஜய் படம் வெளியாகும் போது படம் நன்றாக இல்லை என்று ரஜினி ரசிகர்களும், ரஜினி படம் வெளியாகும் போது படம் நன்றாக இல்லை என விஜய் ரசிகர்களும் சண்டையிடுவது வழக்கம்.

அடுத்த கட்டத்தை நோக்கி மாறிய சண்டை

சமூக வலைதளங்களில் சண்டைகளை தாண்டி தற்போது விஜய் மீது முட்டை அடிப்பேன் என்று ரஜினி ரசிகர்கள் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  விஜய் இந்த சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் போது அவர் மீது அழுகிய முட்டைகளை அடிப்போம் என்று ரஜினி ரசிகர்கள் எக்ஸ் தளத்தின் ஸ்பேசில் பேசிய ஆடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள் இவ்வாறு பேசியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டில் இருந்து அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி அவ்வப்போது சில சூசகமான வார்த்தைகள் மூலம் தெரிவித்து வந்தார். அவரது படங்களிலும் அரசியல் பேச்சுக்கள் இருக்கும். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் தெரிவித்தார். தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி கூறி இருந்தார். இதனால் ரஜினி  ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் விஜய் தற்போது தனது கரியரின் உச்சத்தில் இருக்கும் சமயத்திலேயே அதனை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி உள்ளார்.  விஜய்க்கு அனைத்து இடங்களிலிருந்தும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது, மேலும் மக்கள் செல்வாக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளது. இதுவும் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலும் படிங்க: "அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை" தோல்வி குறித்து உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News