Kallakurichi, Illicit Liquor | தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை ஒழிக்க அரசு சார்பில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வரும் காவல்துறை, இதுசார்ந்த குற்ற நடவடிக்கைகளை தடுக்க கிராம அளவில் உளவுத்துறை மூலம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி உள்ளது. இப்போது கள்ளச்சராயம் மற்றும் போதைப் பொருள் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமே நேரடியாக புகார் அளிக்கும் வகையில் மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் குறித்து மக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணில் புகார் அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் Drug Free TamilNadu என்னும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 11.01.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் Drug Free TamilNadu என்ற மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருள்கள் தொடர்பான புகார் அளிப்பதற்காக 90800 34763 என்ற Whatsapp எண்ணில் Drug Free Kallakurichi என்ற வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதே போன்று மாநில அளவில் இது குறித்து புகார் அளிப்பதற்காக 10581 (Prohibition Help Line) என்ற Toll Free செயல்பட்டு வருகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருள்கள் தொடர்பான புகார்களை மேற்கண்ட தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்" என கூறியுள்ளார். இதேபோல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விநியோகம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.
ஒருவேளை அவர்களிடம் புகார் அளிப்பதற்கு சங்கடம், தயக்கம் இருந்தால் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். உங்களின் தனிப்பட்ட விவரம் குறித்து ரகசியம் காக்க வேண்டும் என்றால், அதனையும் மாவட்ட காவல்துறையிடம் வெளிப்படையாக தெரிவிக்கலாம். உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் சூழலை தவிர்க்க ரகசிய புகார் அளிக்கலாம். எனவே, தமிழ்நாட்டில் பெருகிக் கொண்டிருக்கும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனை கவனத்தில் கொண்டு காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவும்.
மேலும் படிக்க | TNPSC Syllabus : டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்..!
மேலும் படிக்க | பள்ளிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்... இனி இதுதான் தண்டனை - அன்பில் மகேஷ் எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ