Salary Of Adani Group Employees : கௌதம் அதானியின் சம்பளம் அவரது நிர்வாகிகளை விட குறைவாக உள்ளது என்ற செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. செளதம் அதானியும் அவரது சகாக்களும் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதைச் தெரிந்துக் கொள்ளவும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் மொத்தமாக ரூ.9.26 கோடி சம்பளத்தை வாங்கியுள்ளார்.
குறைவான சம்பளம் பெறும் கெளதம் அதானி
கெளதம் அதானியின் சம்பளம் என்பது, தொழில்துறையைச் சேர்ந்த பலரை விடவும், அவரின் நிறுவனத்தில் வேலை செய்யும் பிற நிர்வாகிகளை விட மிகக் குறைவாகும். கௌதம் அதானி தனது போர்ட்ஸ்-டு-எனர்ஜி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களில் இரண்டில் இருந்து மட்டுமே சம்பளம் பெறுகிறார் என அவரது நிறுவனக் குழுவின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகள் காட்டுகின்றன.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) இலிருந்து 2023-24 ஆம் ஆண்டிற்கான அவரது ஊதியம் என்பது, ரூ. 2.19 கோடி சம்பளம் மற்றும் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள சலுகைகள், கொடுப்பனவுகள், பிற சலுகைகள் அடங்கும். AEL இன் 2023-24 ஆண்டு அறிக்கையின்படி, மொத்த ஊதியம் ரூ.2.46 கோடி என்பது முந்தைய நிதியாண்டை (2022-23) விட 3 சதவீதம் மட்டுமே அதிகம். இதனைத் தவிர, அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட் (APSEZ) நிறுவனத்திடமிருந்து ரூ.6.8 கோடி சம்பளம் வாங்குகிறார் கெளதம் அதானி.
குறைவான சம்பளம் வாங்கும் கெளதம் அதானி
கெளதம் அதானியின் சம்பளம் இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய குடும்ப நிறுவனங்களின் தலைவர்களை விட குறைவானதாக இருக்கும். பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கோவிட்-19 பாதிப்பின்போது சம்பளம் வாங்குவதை நிறுத்திவிட்டார். அதற்கு முன்பு அவர் தனது ஊதியத்தை ரூ. 15 கோடி என்ற அளவில் குறைத்துவிட்டார்.
கெளதம் அதானியின் ஊதியம் தொலைத்தொடர்பு ஜாம்பவான் சுனில் பார்தி மிட்டலை விட மிகக் குறைவு (2022-23 இல் ரூ. 16.7 கோடி), ராஜீவ் பஜாஜ் (ரூ 53.7 கோடி), பவன் முஞ்சால் (ரூ 80 கோடி), எல்&டி தலைவர் எஸ் என் சுப்ரமணியன் மற்றும் இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் எஸ் பரேக் என பல தொழிலதிபர்களின் ஊதியத்தை விட கெளதம் அதானி குறைவான சம்பளத்தையே வாங்குகிறார்.
மேலும் படிக்க | பெண்களே உஷார்! ஆண்களின் இந்தப் பழக்கங்களை புறக்கணிக்க வேண்டாம்!
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 106 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதானி, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு அம்பானியுடன் போட்டியிட்டார். அவர் 2022 இல் பணக்கார ஆசியராக ஆனார். ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு மிகவும் குறைந்திருந்த நிலையில், கெளதம் அதானி இந்த ஆண்டு இரண்டு முறை செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார், ஆனால் மீண்டும் அந்த இடத்தை அம்பானியிடம் இழந்தார்.
செல்வந்தர்களின் பட்டியல்
அம்பானி 111 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். அதானி 14வது இடத்தில் உள்ளது.
கௌதம் அதானியின் ஊழியர்களின் சம்பளம்
அதானியின் தம்பி ராஜேஷ், ஏஇஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.4.71 கோடி கமிஷன் உட்பட ரூ.8.37 கோடியும், அவரது மருமகன் பிரணவ் அதானி ரூ.4.5 கோடி கமிஷன் உள்பட ரூ.6.46 கோடியும் பெற்றதாக நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
கௌதம் அதானி AEL இலிருந்து எந்த கமிஷனையும் எடுக்கவில்லை, ஆனால் APSEZ இலிருந்து 5 கோடி பெற்றார். APSEZ வழங்கும் ஊதியத்தில் ரூ.1.8 கோடி சம்பளம் மற்றும் ரூ.5 கோடி கமிஷன் ஆகியவை 2024-25 நிதியாண்டில் செலுத்தப்படும் என்று நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
கெளதம் அதானியின் மகன் கரண் சம்பளம்
கவுதம் அதானியின் சகோதரர், மருமகன் மற்றும் மகன் ஆகியோர் ஒரே ஒரு நிறுவனத்தில் தான் சம்பளம் வாங்குகின்றனர். AEL குழுவில் முக்கிய நிர்வாகியும் இயக்குனருமான வினய் பிரகாஷ் மொத்த ஊதியமாக ரூ.89.37 கோடி பெற்றார். குரூப் சிஎஃப்ஓ ஜுகேஷிந்தர் சிங் ரூ.9.45 கோடி சம்பளம் பெற்றார்.
குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் எஸ் ஜெயின் ரூ.15.25 கோடியும், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ஏடிஜிஎல்) சிஇஓ சுரேஷ் பி மங்லானி ரூ.6.88 கோடியும் சம்பாதித்துள்ளனர். அதானி வில்மர் சிஇஓ அங்ஷு மல்லிக் ரூ.5.15 கோடி ஊதியம் பெற்றார்.
மேலும் படிக்க | கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? சம்பாதிப்பதை திருமணத்துக்கே செலவழிக்கும் இந்தியர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ