சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் வங்கிக்கு போகாமலேயே செயலி மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் வங்கிக் கணக்கை தொடங்கலாம். இது குறித்து வீடியோ மூலம் எஸ்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வ வங்கிக் கணக்கு ஓபனிங் குறித்து மட்டுமல்லாமல் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " இப்போது நீங்கள் வங்கிக்குச் செல்லாமல் SBI-ல் வங்கிக் கணக்கைத் திறக்கலாம். புத்தம் புதிய KYC வீடியோ சேவை மூலம் நீங்கள் எங்கும் எந்த நேரத்திலும் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். யோனோவில் இப்போதே விண்ணப்பிக்கவும். காகிதமற்ற முறையில் எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்".
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்கள் வரி சலுகை பெற செய்யவேண்டியவை!
கணக்கின் அம்சங்கள் என்ன?
* YONO செயலி மூலம் வாடிக்கையாளர்கள் NEFT, IMPS மற்றும் UPI ஐப் பயன்படுத்தி பணத்தை மாற்ற முடியும்.
* இது தவிர, நீங்கள் SBI-ன் இணைய வங்கியையும் பயன்படுத்த முடியும்.
* வாடிக்கையாளருக்கு கிளாசிக் கார்டு வழங்கப்படும்.
* இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ ஆப் மூலம் வங்கி வசதிகள் 24 மணி நேரமும் கிடைக்கும்.
* எஸ்பிஐயின் விரைவு மிஸ்டு கால் வசதி மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கை வசதி கிடைக்கும்.
* இன்டர்நெட் பேங்கிங் சேனல் மூலம் கணக்கு பரிமாற்ற வசதி கிடைக்கும்.
* வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தால், அவருக்கும் பாஸ்புக் வழங்கப்படும்.
* காசோலை புத்தகம், டெபிட்/வவுச்சர் பரிவர்த்தனை அல்லது வேறு எந்த கையொப்ப அடிப்படையிலான சேவைக்கும் வாடிக்கையாளர் அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.
இந்தக் கணக்கை யார் திறக்கலாம்?
இந்த கணக்கை 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே திறக்க முடியும். இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது. வாடிக்கையாளர் கட்டாயமாக பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளரின் மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண் அவரது பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். டிஜிட்டல் சேமிப்புக் கணக்கிற்கு, வாடிக்கையாளர் பயோமெட்ரிக் இ-கேஒய்சியை முடிக்க வேண்டும். அதற்காக அவர் வங்கிக்குச் செல்ல வேண்டும். ஒரு மொபைல் எண்ணிலிருந்து ஒரு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும். கூட்டுக் கணக்கின் கீழ் எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியாது.
மேலும் படிக்க | உங்கள் ரயில் தாமதமா? IRCTC புதிய வசதி அறிமுகம்; பயணிகளுக்கு ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ