ரயில்வே மெகா திட்டம் 2030: No waiting list! உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் மட்டுமே...!!!

இந்திய ரயில்வேயின் மெகா தேசிய ரயில் திட்டம் 2030 (National Rail Plan-NRP 2030)  நடைமுறைக்கு வந்த பிறகு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள், அதாவது கன்ஃபார்ம் டிக்கெட் குறித்து பயணிகள் கவலைப்பட தேவையில்லை.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 18, 2020, 08:54 PM IST
  • இந்திய ரயில்வேயின் மெகா தேசிய ரயில் திட்டம் 2030 நடைமுறைக்கு வந்த பிறகு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் குறித்து பயணிகள் கவலைப்பட தேவையில்லை.
  • தேசிய ரயில் திட்டம் 2030 மூலம் ஒவ்வொரு பயணிகளுக்கும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் கிடைக்கும்.
  • வெயிட்டிங் லிஸ்ட் என்பதே இருக்காது.
ரயில்வே மெகா திட்டம் 2030: No waiting list! உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் மட்டுமே...!!! title=

புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் மெகா தேசிய ரயில் திட்டம் 2030 (National Rail Plan-NRP 2030)  நடைமுறைக்கு வந்த பிறகு உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள், அதாவது கன்ஃபர்ம் டிக்கெட் குறித்து பயணிகள் கவலைப்பட தேவையில்லை என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே (Indian Railway) துறை தேசிய ரயில் திட்டத்தை 2030 தயாரிக்கிறது. இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களிலிருந்து ஆலோசனைகளை பெற இந்த மெகா  திட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

என்ஆர்பி 2030 திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயணிகளுக்கும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள், அதாவது கன்ஃபர்ம் டிக்கெட் கிடைக்கும், மேலும் வெயிட்டிங் லிஸ்ட் என்பதே இருக்காது.

2030 க்குள் தேசிய ரயில் திட்டத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டவும் இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. நாட்டில் மேற்கொள்ளப்படும் சரக்கு போக்குவரத்தில், 47% போக்குவரத்தை இந்திய ரயில்வே மூலம் மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, மேலும் 4 சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக வழிதடங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. 

எஃகு, இரும்புத் தாது, ஜவுளி மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்திற்காக ரயில்வேயை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்திய ரயில்வே திட்டங்களை தயாரித்து வருகிறது. இந்த துறைகளின் முக்கிய நிறுவனங்களான டாடா, அதானி, மஹிந்திரா மற்றும் மாருதி ஆகியவை இதில் அடங்கும்.

தனியார் சரக்கு ரயில்களை இயக்க 2021 மார்ச் மாதத்திற்குள் 11 கி.மீ நீளமுள்ள சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக வழித்தடம் (Dedicated Freight Corridor-DFC) தயாராக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மார்ச் 2022 க்குள் மொத்தம் 2800 கி.மீ DFC பாதையை தயார் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்திற்காக  தனியார் சரக்கு ரயில்களை பயன்படுத்த முன்வரலாம் என்று  ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ | IRCTC: இந்தியாவில் வழக்கமான ரயில் சேவைகள் எப்போது தொடங்கும்.. ரயில்வே கூறுவது என்ன..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News