What a tremendous hike! 2025க்குள் சமூக ஊடக சந்தை 2200 கோடி ரூபாயாக அதிகரிக்கும்!

நாட்டில் சமூக ஊடகங்களின் சந்தை ஆண்டு இறுதிக்குள் 900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2021, 08:03 PM IST
  • அசுர வளர்ச்சி காணும் சமூக ஊடக சந்தை
  • சமூக ஊடகங்களின் சந்தை ஆண்டு இறுதிக்குள் 900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்ப்பு
  • 2025க்குள் சமூக ஊடக சந்தையின் மதிப்பு 2200 கோடி ரூபாயாக அதிகரிக்கும்!
What a tremendous hike! 2025க்குள் சமூக ஊடக சந்தை 2200 கோடி ரூபாயாக அதிகரிக்கும்! title=

புதுடெல்லி: சமூக ஊடகங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இணையத்தின் பரவலும், செல்வாக்கும், தொழில்நுட்பமும், மொபைல் போன்களின் வரத்தும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. இதனால், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமூக ஊடக தளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருவதால், நாட்டில் சமூக ஊடகங்களின் சந்தை ஆண்டு இறுதிக்குள் 900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐஎன்சிஏ இந்தியா இன்ஃப்ளூயன்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக ஊடக செல்வாக்கு சந்தையில் ஆண்டுதோறும் வியாபாரம் 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டுக்குள், இந்தத் துறையில் வணிகம் 2200 கோடியை எட்டும்.

Also Read | மாடித் தோட்டம் சரி, 'டாக்ஸி தோட்டம்' கேள்விப்பட்டதுண்டா?

இணையத்தின் பரப்பளவு மற்றும் செல்வாக்கு அதிகரித்து வருவதால், சமூக ஊடக தளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

அதாவது, கிரிக்கெட் வீரர்களும், நடிகர்கள், நடிகைகளும் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் அல்லவா? அதுபோல, சமூக ஊடக பிரபலங்கள் மூலம், இணையதளங்களில் பொருட்கள் விற்கப்படும். 

சமூக ஊடகங்களில் இத்தகைய 'செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான' வழிகாட்டுதல்களை விளம்பரதாரர்களின் சுய-கட்டுப்பாட்டு அமைப்பு வகுத்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் மாறிய சூழ்நிலைகள் மற்றும் நுகர்வோருடன் நேரடியாக இணைவது என வணிகத்தின் போக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மாறி வருகிறது.

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.  தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் 400 மில்லியன் மக்கள் இருந்தனர் என்று ஐஎன்சிஏ இந்தியா இன்ஃப்ளூயன்சர் குழுமத்தின் தெற்காசியாவின் தலைமை நிர்வாகி பிரசாந்த் குமார் கூறுகிறார்.

Read Also | ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்! அதிக விமானங்களை இயக்க அனுமதி

அந்த எண்ணிக்கை கடந்த 18 மாதங்களில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. அதோடு, நுகர்வோரின் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் நிறுவனங்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன.

பிரபலங்களை விட, சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களின் செல்வாக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அறிக்கையின்படி, தனிநபர் பராமரிப்பு பொருட்களின் விளம்பரங்கள் அல்லது ஸ்பான்சர்ஷிப்புகள் சந்தையில் 25 சதவிகிதம், சமையல், குடிநீர் பொருட்கள் 20 சதவீதம், ஃபேஷன் மற்றும் நகை பொருட்கள் 15 சதவிகிதம் மற்றும் மொபைல் மற்றும் மின்சார சாதனங்களில் 10 சதவிகிதம் ஆகும்.

இந்த நான்கு பிரிவுகளும் இந்த சந்தையில் 70 சதவிகிதம் ஆகும். சுவாரஸ்யமாக, புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த சந்தையில் 27 சதவிகிதம் மட்டுமே இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் 73 சதவிகிதம் வரை இருப்பதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

Also Read | கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டியின் ‘அது ஒரு கனாக்காலம்'

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News