புதுடெல்லி: சிறப்பு செயலியை பயன்படுத்தி பில் கட்டணம் செலுத்தினால், 10 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கும். சமையல் எரிவாயு பதிவு செய்தால் 200 ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தள்ளுபடியில் சிலிண்டரை பெறலாம்.
அதிகரித்து வரும் பணவீக்கம் பொது மக்களுக்கு சுமையாகிவிட்டது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொடுகின்றன. இந்த நிலையில் சிலிண்டருக்கு தள்ளுபடி கிடைக்கும் என்றால் அனைவரும் ஆவல் காட்டுவது இயல்பானது தான். 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரில் நிலையான கேஷ்பேக் வசதி கிடைக்கிறது.
டிஜிட்டல் கட்டண வசதியை வழங்கும் பாக்கெட்ஸ் செயலியின் (Pockets app) மூலம் வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் 10 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். இந்த செயலியை ஐசிஐசிஐ வங்கி இயக்குகிறது.
Also Read | LPG சிலிண்டரை எங்கிருந்து வாங்கலாம்? இனி அது உங்கள் சாய்ஸ்
சலுகையின் ஒரு பகுதியாக, நீங்கள் பாக்கெட்ஸ் செயலியின் மூலம் ரூ .200 அல்லது அதற்கு மேற்பட்ட பில் செலுத்தினால், உங்களுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கும். சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் எந்த விளம்பர குறியீட்டையும் உள்ளிட தேவையில்லை.
இந்த சலுகை ஒரு மாதத்தில் மூன்று பில் செலுத்துதல்களில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனத்தின் விதிகளின்படி, ஒரு மணி நேரத்தில் 50 பயனர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு மணி நேரத்தில் 1 வெகுமதி / கேஷ்பேக் மற்றும் பில் செலுத்துதல் என்ற நிலையில் ஒரு மாதத்தில் 3 வெகுமதிகள் / கேஷ்பேக் வரை வெல்ல முடியும்.
Also Read | LPG மானியம் தவறுதலாக கைவிட்டுப் போனதா? மீண்டும் சுலபமாக பெறலாம்
எரிவாயு முன்பதிவு தொடர்பான இந்த தள்ளுபடியை எவ்வாறு பெறுவது என்பது பின்வருமாறு:
1. உங்கள் பாக்கெட்ஸ் வாலட் (Pockets Wallet) செயலியை திறந்து ரீசார்ஜ் மற்றும் கட்டண பில்கள் பிரிவுக்குச் செல்லவும்.
2. கட்டண பில்கள் என்ற பிரிவை கிளிக் செய்யவும்
3. பில்லர்களை தேர்வு செய்யும் பிரிவில், more என்ற தெரிவுக்கு செல்லவும்
4. எல்பிஜி முன்பதிவு விருப்பம் திறக்கும்.
5. இப்போது உங்கள் எல்பிஜி சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
6. இப்போது உங்கள் முன்பதிவு தொகை திரையில் காண்பிக்கப்படும்.
7. அதில் கிளிக் செய்து முன்பதிவு தொகையை
8. பரிவர்த்தனைக்குப் பிறகு, 10% கேஷ்பேக் கிடைக்கும்.
9. இது உங்கள் Pockets wallet இல் வரவு வைக்கப்படும்
Also Read | சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய ஆதார், முகவரி சான்று தேவையில்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR