இந்துக் கோவில்களில் இருக்கும் பூசாரி, வழிபாட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம், விபூதி வழங்குவது வழக்கம். ஏன் இவ்வாறு வழங்கப்படுகிறது தெரயுமா?
குங்குமத்தை விட விபூதியினை மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்வர் ஏன் தெரியுமா? ஏனெனில் விபூதி என்பது இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒன்று. பசுமாட்டின் சாணத்தை எடுத்து, உலரவிட்டு பின்னர் உமியினால் மூடி புடம் போட்டு எடுப்பர். பசுவின் சானத்தில் இருந்து வேதிப்பொருட்கள் ஏதும் சேர்க்கப்படாமல் கிடைக்கப்பெறும் இந்த விபூதிக்கு மகத்துவமும் அதிகம். அதனாலேயே அனைவராலும் விபூதி பரிந்துறைக்கப்படுகிறது. ஆனால் இப்போது கிடைக்கும் பாக்கெட் விபூதிகள் இவ்வாறு தான் தயாரிக்கப்படுகின்றனவா?
சரி போகட்டம்., நம் உடலானது சில அதிர்வுகளாலே இயங்குகிறது என கூறுகின்றனர். நன் முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியானது உடலில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கு என நம்பப்படுகிறது. கோவில் செல்வதே நல்ல அதிர்வுகளை பெற்று மன சாந்தம் அடைய தான் என்பது நாம் அறிந்தது, அந்த வகையில் கோவில் செல்லும் பக்தர்களின் மனதினை சாந்தம் அடையச்செய்து அமைதி தர உதவுவ விபூதி வழங்கப்படுகிறது.
பொதுவாக விபூதி புருவத்திற்கு இடையில், கழுத்துப் பகுதியில், மார்பு பகுதியிலும் இட்டுக்கொள்வர்.... ஏன் அவ்வாறு இடப்படுகிறது. மனித உடலிலே நெற்றிப் பகுதியிலேயே வெப்பம் அதிகமாக வெளியாகிறது. எனவே புருவத்திற்கு இடையில் விபூதி இடுவதினால் சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உடலினுள் அனுப்பும. உடலில் சாம்பல் சத்து குறைந்தால் ஏற்படும் சோகைகளை களைய விபூதி பெருமளவில் உதவுகிறது.
மேலும், புருவங்களுக்கும் இடையில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை கொண்டுள்ளன. அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யலாம். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம்போன்றவை இடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இரு புருவங்களுக்கு இடையில் சந்தனம் இடுகையில், முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்துவைத்திருக்கும் Hippocampus சிறப்பான முறையில் வேலைசெய்கிறது. உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் பயன்படுத்தியிருப்பது இதன் காரணமாக தான்.
விபூதி இடுதல் என்னும் செயல்பாட்டில் இன்னும் பல பயன்பாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தினையும் மக்களுக்கு கூறி புரியவைக்க முடியுமா. நம் மக்களுக்கு ஒரு செயல்பாட்டால் இவ்வளவு பயன்கள் உண்டு எனவே அதை செய்யுங்கள் என்று கூறுவதை காட்டிலும், இவ்வாறு செய்யாவிட்டால் சாமி கண்னை குற்றிவிடும் என பயமுறுத்தினால் நிச்சையம் செய்வார்கள் அல்லவா. அதனாலே கடவுளை காரணம் காட்டி விபூதி பூசும் பழக்கத்தினை நம் வழங்கங்களில் இணைத்துவிட்டனர் நம் முன்னோர்கள்!