2 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற 17-வயது தந்தை!

தன் மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால் பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையினை, தந்தையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்சியினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Apr 22, 2018, 08:48 AM IST
2 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற 17-வயது தந்தை! title=

தன் மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால் பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையினை, தந்தையே கொன்ற சம்பவம் பெரும் அதிர்சியினை ஏற்படுத்தியுள்ளது!

புதுடெல்லி மங்கல்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், 16-வயது சிறுமிக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

இதனையடுத்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக இச்சிறுமி வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். எனவே புதுடெல்லி பல்லிக்கா பஜாரில் விற்பனை பெண்னாக பணியில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருக்கும் தன் கணவரிடம் குழந்தையினை விட்டு விட்டு பணிக்கு சென்றுள்ளார் இச்சிறுமி. பின்னர் மாலை வீடு திரும்பிவந்து பார்க்கும் போது வீட்டில் குழந்தை மட்டும் உடல் அசைவுகள் ஏதும் இன்றி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளார். அப்போது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவாகாரம் குறித்து குழந்தையின் தந்தையினை பிடித்து விசாரிக்கையில் தன் மனைவிக்கு பிறருடன் தொடர்புள்ளதாகவும், இக்குழந்தை எனக்கு பிறந்தது இல்லை எனவும் கூறி குழந்தையினை கென்றாதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள குழந்தையின் தந்தை ஜூவநைல் இதற்கு முன்னதாக பல திருட்டு சம்பவங்களில் சிக்கியுள்ளார். தற்போது வேலை ஏதும் இன்றி வீட்டில் இருந்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News