15:04 06-05-2018
மாணவர் மகாலிங்கம் தந்தை மரணம் குறித்து கேரள முதல்வருடம் கமல் பேசிவருகிறார். மேலும், மாணவர் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்து சேரும் வரை மக்கள் நீதி மய்யம் உதவும் என கமல் தெரிவித்துள்ளார்.
15:04 06-05-2018
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டை சேர்ந்தவர்.
இதையடுத்து, தேர்வு மையத்திலிருந்து வெளியே வந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சர்ச்சை மற்றும் உயிர் பலிக்கு இடையே நீட் தேர்வு முடிவடைந்துள்ளது. இந்தியா முழுவதும் 2255 மையங்களில் 13,26,725 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில் 1.07,288 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் பெற்றோர்களுடன் விடிய விடிய தேர்வு மையங்களை தேடி சென்றடைந்தனர். கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
இம்மாநிலங்களில் தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்கள் கடும் கெடுபிடிகளுடன் காலை 7.30 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் நீட் வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டன என்று தகவல் தெரிவிதுள்ளனர்.
மேலும், நீட் வினாத்தாளில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து பெரியளவில் கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது உயிரியல் பாடபிரிவில் கேள்விகள் எளிதாக இருந்தது என்றும் குறியுள்ளனர்.