Congress Candidate List In Rajasthan Elections 2023: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் என்ன தான் நடக்கிறது? வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏன் தாமதம் ஆகிறது? பாஜக முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எப்பொழுது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்த வரை பாரத் ஆதிவாசி கட்சி ( Bharat Adivasi Party) மற்றும் கிராமின் கிசான் மஸ்தூர் சமிதி (Gramin Kisan Mazdoor Samiti ) உட்பட சிறிய கட்சிகளுடன் சீட்-பகிர்வு மற்றும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது.
பாரத் ஆதிவாசி கட்சி என்பது தெற்கு ராஜஸ்தானில் உள்ள பழங்குடியினரின் அமைப்பான பாரதிய ஆதிவாசி சமூகத்தின் அரசியல் கட்சியாகும். மறுபுறம், கிராமின் கிசான் மஸ்தூர் சமிதி என்பது வடக்கு ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் செயல்படும் விவசாயிகள் சங்கமாகும். இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தன் மூலம், அந்த சமூகத்தின் வாக்குகள் சிதறாமல், கணிசமான வாக்குகளை பெறலாம், அதன்மூலம் எளிதில் வெற்றியை சூடலாம் என காங்கிரஸ் கணக்கு போடுகிறது.
பழங்குடியினர் பகுதியில் 12-13 இடங்கள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாரத் ஆதிவாசி கட்சி (பிஏபி) கேட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் அவர்களுக்கு நான்கு இடங்களை மட்டுமே தர விரும்புகிறது. மறுபுறம் கிராமின் கிசான் மஸ்தூர் சமிதி (ஜிகேஎஸ்) கட்சி தங்கள் வேட்பாளர்கள் இருவருக்கு காங்கிரஸ் சின்னத்தில் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது.
ஆனால் மத்திய காங்கிரஸ் தலைமை இந்த இரண்டு அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கலாம் என விரும்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் அசோக் கெலாட் நம்பவில்லை. ஆனால் சச்சின் பைலட் தரப்பினர், அவர்களுடன் தேர்தலுக்கு முந்தைய பேச்சுவாரத்தை நடந்துவதின் மூலம் கட்சிக்கு பயனளிக்கும் எனக் கூறுகின்றனர்.
மேலும் படிக்க - சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!
பாரத் ஆதிவாசி கட்சி பலம் என்ன?
2018 ஆம் ஆண்டில் முதல் முறையாக தேர்தலில் பாரத் ஆதிவாசி கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். தெற்கு ராஜஸ்தானின் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குஜராத்தைச் சேர்ந்த பாரதிய பழங்குடியினர் கட்சியின் (Gujarat-based Bharatiya Tribal Party) சின்னம் மற்றும் பெயரின் கீழ் ஆறு இடங்களில் போட்டியிட்டது. அவர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதோடு சில தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். தற்போது, அக்கட்சிக்கு ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஆனால் இந்தமுறை ராஜஸ்தானை சட்டசபை தேர்தலில் இந்த பழங்குடியினர் குழுக்கள், தங்கள் சொந்தக் கட்சியான பாரத் ஆதிவாசி கட்சியை தொடங்கியுள்ளனர். பட்டியல் பழங்குடியினருக்கு (எஸ்டி) ஒதுக்கப்பட்ட 17 இடங்களிலும், உதய்பூர், துங்கர்பூர், ராஜ்சமந்த், பன்ஸ்வாரா மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் உள்ள ஒன்பது பொது இடங்களிலும் அவர்கள் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். முன்பு (2018 சட்டமன்ற தேர்தல்) இவர்கள் குஜராத்தைச் சேர்ந்த பாரதிய பழங்குடியினர் கட்சியின் (BTP) ஒரு பகுதியாக, மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.
எங்கள் பகுதியில் குறைந்தபட்சம் 26-27 இடங்களில் எங்களுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் எங்களை நான்கு இடங்களுக்கு மட்டுப்படுத்த விரும்புகிறது. அவர்கள் எங்களிடம் ஒரு திட்டத்துடன் வந்தனர். ஆனால் நாங்கள் அதை நிராகரித்துவிட்டோம் என்று பாரத் ஆதிவாசி கட்சி (BAP) இன் தேசிய ஒருங்கிணைப்பாளர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
கிராமின் கிசான் மஸ்தூர் சமிதி பலம் என்ன?
அதேபோல மறுபுறம் கிராமின் கிசான் மஸ்தூர் சமிதி (GKS) தற்போது சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் இல்லை என்றாலும், மாநிலத்தின் மிகப்பெரிய விவசாயிகள் சங்கம் 2016 இல் நிறுவப்பட்டது. அவர்கள் ராஜஸ்தானில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டினர். ஷாஜகான்பூர் எல்லையில் நடந்த போராட்டங்களுக்கும் அவர்கள் தலைமை தாங்கினர். "கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு ராஜஸ்தான் மாவட்டங்களான ஸ்ரீ கங்காநகர், ஹனுமன்கர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட அனுப்கர் மாவட்டங்களில் கணிசமான விவசாயிகள் அணிதிரட்டல் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களும் இந்தமுறை காங்கிரஸ் சின்னத்தில் இரண்டு இடங்களில் போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளனர்.
கெலாட் ஏன் தயங்குகிறார்?
கெலாட் பிஏபி தலைவர்களுடன் நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை. செப்டம்பர் 2020 இல், பழங்குடியினர் துணைத் திட்டம் (TSP) பகுதியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பழங்குடி இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை கொடுத்தது.
பிஏபி, ஜிகேஸ், ஆசாத் சமாஜ் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கு இடம் கொடுத்தால், அவர்கள் தங்கள் பகுதிகளில் முக்கிய வாக்கு வங்கியை கொண்டுள்ளனர். அந்த இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றால், அந்த இடத்தை நிரந்தரமாக அவர்கள் வசம் சென்று விடும். எதிர்காலத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்படலாம் என நினைக்கிறார்.
காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட அனுமதி?
இவர்களை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்து, அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துக் கொள்ளலாம் எனவும் அசோக் கெலாட் கருதுகிறார். அதாவது 2018 இல், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) வெற்றி பெற்ற ஆறு எம்எல்ஏக்கள் பின்னர் காங்கிரஸில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கக்து.
ராஜஸ்தானில் மூன்றாம் அணியின் பலம் என்ன?
2000-க்கு பிந்தைய ராஜஸ்தான் அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஆனால் தற்போது கணிசமான எண்ணிக்கையிலான சுயேட்சைகள் மற்றும் மூன்றாம் அணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். அவர்கள் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ