ஜவஹர்லால் நேரு, இந்திராவிற்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறை ஆட்சியமைக்கும் 3-வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ள நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு 3 சத்தியம் செய்து கொடுத்துள்ளார்!
16-வது மக்களவைக்கான ஆட்சி காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில், 17-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் நாள் துவங்கி மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைப்பெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் மோடி தலைமையிலான பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கும் மோடி தலைமையிலான பாஜக, மீண்டும் மக்களின் மனதை வென்றுள்ளது என இன்றைய தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல மக்களவை தொகுதிகளில் பாஜக கனிசமான வாக்குகளுடன் முன்னிலை பெற்று காங்கிரஸ் கட்சியை பின்னடைவு காண செய்தது. இந்த மாபெரும் வெற்றியை மக்களக்கு அற்பணிக்கும் விதமாக இன்று கட்சி தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். தனது உரையின் போது நாட்டு மக்களுக்கு மூன்று சத்தியத்தினையும் அவர் அளித்துள்ளார். மோடியின் பொதுக்கூட்ட உரை பின்வருமாறு...
"நான் செய்த விஷயங்கள் யாவும் தவறான நோக்கத்துடன் செய்தவை இல்லை., எனினும் நம் ஆட்சியில் சில கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அவை என் வேண்டும் என்று கொண்டு வரப்பட்டவை அல்ல, காலத்தின் கட்டாயத்தால் அமைந்தது. மேலும் நான் நாட்டு மக்களிடையே சொல்லிக்கொள்ள விரும்புவது நான் செய்வது எல்லாம் எனக்காகவோ, அல்லது என் கட்சியினருக்காகவோ அல்ல, இந்தியராகிய நம் அனைவருக்காகவும் தான். அனைவரின் நலனுக்குகாகவும் தான்"
"கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது பலருக்கு நான் யார் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனினும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கை தற்போது பல மடங்களு அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். மக்களின் நம்பிக்கை வீணாகாத வண்ணத்திலும், உலக மக்களை என் பக்கம் திரும்ப வைத்த நாட்டு மக்களின் நம்பிக்கையை கெடுக்காத வகையிலும் நாம் ஒன்றினைந்து செயல்பட்டு இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், இந்தியர்களின் வளர்ச்சிக்காகவும் போராடுவோம்" என குறிப்பிட்டு பேசினார்.
கட்சி தொண்டர்களின் உழைக்கு குறிப்பிட்டு பேசிய மோடி அவர்கள், இத்தேர்தலில் பெற்ற வெற்றியை நாட்டு மக்களுக்கு அற்பணிப்பதாகவும், இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றது யார் என கேட்டாள் அது இந்திய மக்களின் ஜனநாயகம் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே பாஜகவின் வெற்றி மக்களுக்கான ஒன்று என பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக கட்சி தலைமை அலுவலகத்தில் பேசிய அமித்ஷா அவர்களும் இத்தேர்தலில் பாஜக பெறும் வெற்றி மக்களுக்கான வெற்றி என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் பாஜக-வின் வெற்றியை உறுதி செய்துவிட்ட நிலையில் தற்போது நாட்டு மக்களின் கவனம் எல்லாம் புதிய மக்களவையை குறிவைத்து காத்திருக்கின்றது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி பிரதமரின் பதவியேற்கு விழாவானது அடுத்த வாரம் முற்பாதியில் நிகழலாம் என கூறப்படுகிறது.