வரும் 23-ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலச்சந்திரன் அவர்கள் தெரிவிக்கையில்... பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் மீனவர்கள் தங்கள் பாதுகாப்பு நலன் கருதி கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். கடலுக்குள் படகுகளை எடுத்துதச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.