லக்னோ: உபி முதல்வர் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கைது செய்யப்பட்ட இளம்பெண்னின் தந்தை காவல்நிலையத்தில் இறந்துள்ளார்!
உத்திரபிரதேச மாநிலம் முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டிற்கு முன்பு, இளம்பெண் ஒருவர், நேற்று தன் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்கையில்... பாஜக MLA குல்தீப் சிங் சென்கர் மற்றம் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட MLA மீது வழக்கு தொடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பலரிடம் புகார் அளித்தப்போதிலும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து முதல்வரிடம் தெரிவித்த போதிலும் தகுந்த நியாயம் கிடைக்கவில்லை. இதனால் கோபமுற்ற இளம்பெண் "எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் இல்லையேல் தற்கொலை செய்துக்கொள்ளுவேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த விவாகாரம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட MLA குல்தீப் சிங் தெரிவிக்கையில்... என்னை சுற்றி சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார்
இதனையடுத்து நேற்று காலை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதனையடத்து இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தார் கௌதம் பள்ளி காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
I was raped. I have been going from pillar to post for one year but no one listened to me. I want all of them arrested otherwise I will kill myself. I had even gone to the CM to no result. When we lodged FIR we were threatened: Woman allegedly raped by BJP MLA pic.twitter.com/wgHrNz1Bmi
— ANI UP (@ANINewsUP) April 8, 2018
இந்நிலையில் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்னின் தந்தை காவல் நிலையத்தில் விசாரணையின் போது இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது கண்டனத்தினை பதிவுசெய்துள்ள காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜீவால் அவர்கள் தெரவிக்கையில்... "பாஜக ஆட்சியில் குற்றவாலிகள் தண்டிக்கப்பட்டதை விட பாதிக்கப்பட்டவர்கள் தான் தண்டிக்கப் படுகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்!
Gruesome & barbaric!
Humanity gets shamed as the rape victim attepts suicide & her father is beaten & dies in police custody.Instead of arresting criminals, victims are arrested by U.P BJP Govt.
‘Goonda Raj’ prevails in U.P, justice held to ransom as BJP leaders run a-mock. pic.twitter.com/Vxng78PvAW
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 9, 2018