தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

Fenugreek Benefits: மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, சோடியம் போன்ற பல தாதுக்கள் வெந்தயத்தில் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2022, 06:18 PM IST
  • வெந்தயம் நம் உணவின் சுவையை அதிகரிக்கிறது.
  • வெந்தய விதைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வெந்தய விதைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் title=

பல வருடங்களாக ஒவ்வொரு வீட்டிலும் மிக முக்கிய உணவுப்பொருளாக இருப்பது வெந்தயம். நமது மூதாதையர்கள் முதல் இன்று வரை நாம் இதை பல விதங்களில் பல உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இது நம் உணவின் சுவையை அதிகரிக்கிறது. 

எனினும் வெந்தயம் சமையலறைக்கு வெளியேயும், பல பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது. மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, சோடியம் போன்ற பல தாதுக்கள் வெந்தயத்தில் உள்ளன. அவை நம் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். வெந்தயத்தை உணவில் சேர்த்து உங்கள் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க உதவும்:

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் சிரமப்படுகின்றனர். பலவித முயற்சிகளை எடுத்தும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. பல நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்த வளர்சிதை மாற்ற விகிதத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது. வெந்தயத்தின் நுகர்வு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.

இது உடல் பருமனை குறைக்கிறது. இதற்கு முளைத்த வெந்தயம் அல்லது வெந்தய டீயை உட்கொள்ளலாம். வெந்தய டீ தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை எடுத்து அதில் வெந்நீரைக் கலக்கவும். சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு, விரும்பினால் சிறிது தேனும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதிகரித்து வரும் உங்கள் எடை கட்டுக்குள் வரும்.

இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது:

உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் வெந்தய விதைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். வெந்தயத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், நீங்கள் முளைத்த வெந்தய விதைகளைப் பயன்படுத்தலாம். இரும்புச்சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது. 

மேலும் படிக்க | இந்த மூலிகை ஷாம்பூவை தயார் செய்து முடியை பளபளப்பாகவும் 

முடி உதிர்தல் குறையும்: 

வெந்தய விதைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முதலில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டி, வெந்தயத்தை ஒரு துணியில் கட்டி, அதன் நீரில் தலைமுடியைக் கழுவவும். ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலமும், அதன் நீரில் முடியைக் கழுவுவதன் மூலம், முடி உதிர்தல் பிரச்சனை குறைவதுடன், முடி வளர்ச்சியும் வேகமாக அதிகரிக்கும்.

மாதவிடாய் சீராகும்:

இன்றைய காலகட்டத்தில் மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருப்பது பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பல பெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. உங்களுக்கும் மாதவிடாய் சரியாக வராமல் தொந்தரவு இருந்தால், முளைத்த வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் மாதவிடாயை சீராக்குகிறது.

வயிற்றுப் பிரச்சனைகள் குணமாகும்:

வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வெந்தய விதைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதற்கு வெந்தய முளைகளைப் பயன்படுத்தலாம். முதலில் வெந்தய விதைகளை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும். அதன் பிறகு தண்ணீரில் ஊறவைத்து சில மணி நேரம் அப்படியே விடவும். நன்றாக ஊறியதும் பருத்தி துணியில் கட்டி முளைக்க வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். முளைத்த வெந்தயத்தில் ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளன. இது வயிற்றின் இரைப்பை குடல் அமைப்பை சரிசெய்ய உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் பல கரையக்கூடிய நார்ச்சத்து வெந்தய விதையில் உள்ளது.

மேலும் படிக்க | கோடையில் உடல் நலம் காக்கும் வெங்காயத்தின் நன்மைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News