Stomach Gas Problem: பொதுவாக நம் வயிற்றில் பல பிரச்சனைகள் வந்தாலும், வாயு பிரச்சனை அனைவருகும் வரும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. சில சமயங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகி நெஞ்சு மற்றும் தலையிலும் வலி ஏற்படுகிறது. சத்தில்லாத, ஒழுங்காக சமைக்கப்படாத உணவை சாப்பிடுவதால், வயிற்றில் அதிக வாயு உருவாகத் தொடங்குகிறது. சிறுகுடலில் வாயு உருவாகி வயிறு முழுதும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயிற்றில் வாயு ஏற்படுவதற்கான காரணங்கள்
வயிற்றில் வாயு உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன:
- அதிகமாக உண்பது
- நீண்ட நேரம் பசியுடன் இருப்பது
- காரமான, மசாலா நிறைந்த உணவை உண்பது
வயிற்றில் வாயு உருவாவதற்கான அறிகுறிகள்
வயிற்றில் வாயு (Gas Problem) உருவாவதால் வயிற்று வலி ஏற்படுகிறது. இது தவிர, அமிலத்தன்மை காரணமாக மற்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன:
- வயிறு உப்பசமாகத் தோன்றுவது
- வயிற்றில் பிடிப்புகள் ஏற்படுவது
- அடிவயிற்றில் லேசான வலி
- அவ்வப்போது வாந்தி வருவது
- தலைவலி இருப்பது.
- நாள் முழுவதும் மந்தமாக உணர்வது
வயிற்றில் அதிக வாயு ஏற்பட்டால், இவற்றைத் தவிர்க்கவும்
வயிற்றில் வாயு அதிகமாக இருந்தால், சில பொருட்களை சாப்பிடவே கூடாது. அவற்றைப் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்
1. தேநீர் அருந்துவது
நாட்டின் பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி கூறுகையில், வெறும் வயிற்றில் தேநீர் (Tea) குடிப்பதால் வாயுத்தொல்லை ஏற்படும் என்கிறார். வயிற்றில் அதிக வாயு உருவானால், தேநீர் அருந்தக்கூடாது. டீ குடிப்பதால், உணவில் உள்ள சத்துக்களை உடலால் சரியாக கிரகிக்க முடிவதில்லை.
2. கொண்டைக்கடலை உட்கொள்வது
கொண்டைக்கடலை சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகிறது. குறிப்பாக செரிமான அமைப்பு மெதுவாக செயல்படுபவர்கள் அல்லது மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கொண்டைக்கடலை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
3. சேப்பங்கிழங்கை உட்கொள்வது
சேப்பங்கிழங்கு காற்றை மேம்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வயிற்றில் வாயு அதிகமாக இருப்பவர்கள் சேப்பங்கிழங்கை குறைவாக சாப்பிட வேண்டும். சேப்பங்கிழங்கை உட்கொண்டால், உடனே கொத்தமல்லி விதையை வெந்நீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் வயிற்றில் வாயுவைக் குறைக்கும் மற்றும் வயிற்று வலி இருக்காது.
4. ராஜ்மா உட்கொள்வது
ராஜ்மா சாப்பிடுவதாலும் வயிற்றில் வாயு ஏற்படலாம். உங்களுக்கு மலச்சிக்கல் அல்லது வாயு பிரச்சனை அதிகமாக இருந்தால், ராஜ்மாவை உட்கொள்ளவே கூடாது. ராஜ்மா, உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கிறது. இது வயிற்றில் வாயுத்தொல்லை மற்றும் கனமான உணர்வை ஏற்படுத்தும்.
ALSO READ | குளிர்காலத்தில் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மிக அதிகம்: தவிர்ப்பது எப்படி?
5. காலிஃபிளவர் மற்றும் கொடைமிளகாய்
வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு காலிஃபிளவர் (Cauliflower) மற்றும் கொடைமிளகாய் ஆகியவற்றால் பிரச்சனை ஏற்படும். இவற்றை எளிதில் ஜீரணிக்க முடியாது. வயிற்றில் அதிக வாயு உருவாகும் நபர்களுக்கு இவை தீங்கு விளைவிக்கும்.
வயிற்றில் வாயு உருவானால் இவற்றை செய்யலாம்
- வயிற்றில் வாயு உருவானால், உணவில் சற்று அதிக அளவில் பெருங்காயம், மல்லி விதைகளை சேர்க்க வேண்டும்.
- காலையும் மலையும் கண்டிப்பாக வாக்கிங் செல்லுங்கள்.
- சாப்பிட்ட உடனேயே அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்.
- உணவு உட்கொண்ட உடனேயே படுக்கைக்குச் செல்ல வேண்டாம்.
- சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடக்கவும், அது உணவை ஜீரணிக்க உதவுகிறது.
(குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. கல்வி நேக்கத்தில் மட்டுமே இவை வழங்கப்பட்டுள்ளன.)
ALSO READ | வலுவான நுரையீரலுக்கு இந்த 5 பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR