Fatty Liver Problem: தவறான வாழ்க்கை முறை காரணமாக நமக்கு வரக்கூடிய உடல்நல கோளாறுகளில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையும் ஒன்றாகும். சமீக காலங்களில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தவறான உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக, கொழுப்பு கல்லீரல் பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. கொழுப்பு கல்லீரல் ஹெபடிக் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு அதிகமாகக் குவியும் போது இந்த நோய் ஏற்படுகிறது.
இதனால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி கல்லீரலில் கொழுப்பு சேர்வதால், இன்னும் பல தீவிர நோய்களின் ஆபத்தும் அதிகரிக்கின்றது.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில், கல்லீரல் ஈரல் அழற்சி, கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயம் அதிகரிக்கக்கூடும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் மிக அவசியமாகும்.
இவை தவிர சில ஆயுர்வேத தீர்வுகளின் மூலமும் கல்லீரல் பிரச்ச்னையில் நிவாரணம் காணலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வேம்பு (Neem)
ஆயுர்வேதத்தில் வேம்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது பல நோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை குணப்படுத்த உதவுகின்றன. இதனை உட்கொள்வதால் கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது உடலில் உள்ள நச்சுகளை வேகமாக அகற்ற உதவுகின்றது.
மஞ்சள் (Turmeric)
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு மஞ்சள் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்ற தனிமம் உள்ளது. இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி இதில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரலில் உருவாகும் வீக்கத்தைக் குறைக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த நீரை குடிப்பது நல்ல பலன் தரும்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மை
நெல்லிக்காய் (Amla)
பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள நெல்லிக்காய் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்த உதவும். இதில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கல்லீரல் செயல்பாட்டை வலுப்படுத்தவும் கல்லீரல் பாதிப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. உடலில் உள்ள நச்சுகளை வேகமாக நீக்க, தினமும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.
இஞ்சி (Ginger)
இஞ்சியை நாம் பல வித உணவுகளில் பயன்படுத்துகிறோம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உணவின் சுவையை அதிகரிப்பதோடு இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் சில உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. இவை கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இவை கல்லீரல் நொதிகளை மேம்படுத்துகின்றன. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி உட்கொள்வது நல்ல நிவாரணம் அளிக்கும்.
கிலோய் (Giloy)
கிலோய் எனப்படும் சீந்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த மூலிகையாக கருதப்படுகின்றது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. தொடர்ந்து கிலோய் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பழத்தை விடுங்க... கொய்யா இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் - இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ