Everyday Morning Consume Badam, Health Tips In Tamil: நட்ஸ் மற்றும் விதைகளை தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் என மருத்துவர் நிபுணர்கள் முதல் தாய், மனைவி, தந்தை உள்ளிட்ட வீட்டு வைத்தியர்கள் வரை பலரும் கூறுவது. அந்த வகையில், நட்ஸில் பாதாம் பருப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாதாம் சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும் இருக்கும் என்பதால் அனைத்து வயதினரும் அதனை விரும்பி எடுத்துக் கொள்வார்கள். பாதாமில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
அதுவும் ஆசிய நாடுகளின் உணவு முறைகளில் பாதாம் பருப்பு முக்கிய இடத்தையும் பிடிக்கிறது. நமது வீட்டிலும் பாதாமின் பயன்பாடு அதிகமாக இருக்கும். முன்னர் எல்லாம், காலையில் எழுந்தவுடன் குழந்தைகளை பாதாம் சாப்பிட வைக்கும் வழக்கம் பல குடும்பங்களில் இருந்தது. குறிப்பாக இது ஒரு ஆரோக்கியமான செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது. ஆம் வெறும் வயிற்றில் நீங்கள் பாதாமை உட்கொள்வதன் மூலம் உங்களின் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
தினமும் காலையில் பாதாம்: கிடைக்கும் 5 நன்மைகள் என்னென்ன?
நீங்கள் அதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம் இரண்டிலும் உங்களுக்கு நன்மையே கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று பாதாம் பருப்புகளை, அதாவது குறைந்த அளவில் எடுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | பப்பாளி இலை ஜூஸ் மட்டும் குடித்தால் மூன்றே நாட்களில் 20 வயது குறைந்துவிடும்?
தினமும் காலையில் பாதாம்: உடல் எடை குறைக்க கைக்கொடுக்கும்
நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர் என்றால் இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் வெறும் வயிற்றில் மூன்று பாதாம்களை சாப்பிடுவதனால் உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் கிடைக்கும். புரதச்சத்தும் இதில் இருக்கிறது. அப்படி இருக்க உங்களுக்கு காலையில் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால் நீங்கள் நொறுக்கு தீனியை உட்கொள்ள மாட்டீர்கள், அதிகமான கலோரிகளையும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இந்த பழக்கம் உடல் எடையை குறைப்பதில் பெரிய அளவுக்கு உதவும்.
தினமும் காலையில் பாதாம்: ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
பாதாமில் மெக்னீசியம் என்ற ஊட்டச்சத்து இருப்பதால் உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவில் முக்கிய பங்காற்றும். இது உங்களது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். மக்னீசியம் இன்சுலின் சீராக சுரப்பதில் உதவுவதன் மூலம் சர்க்கரை நோய் சார்ந்த ஆபத்துகளையும் நீக்குகிறது.
மேலும் படிக்க | பாதாம் பிசின் சாப்பிட்டால் இவ்வளவு நல்லாதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
தினமும் காலையில் பாதாம்: இதயத்தை பாதுகாக்கும்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாதாமை சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு நல்லது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம், பாதாமில் Monosaturated கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவும். கொலஸ்ட்ரால் அளவை சீராக்குவதன் மூலம் உங்களின் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் நீங்கள் சீராக வைத்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் பாதாம்: நோய்களிடம் இருந்து பாதுகாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி என்பது தற்போது அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. காரணம் கரோனா பெருந்தோற்று காலகட்டத்திற்கு பின்னர் தனிநபரின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சிலர் கருதுகின்றனர். அப்படி இருக்க பாதாமில் உள்ள வைட்டமின் ஈ உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் மூன்று பாதாம் பருப்புகளை உட்கொள்வதால் நோய்களில் இருந்தும், தொற்றுகளில் இருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் பாதாம்: எலும்புகள் வலுவாகும்
பாதாமில் மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகிய கனிமங்கள் நிறைந்து இருக்கின்றன. இவை உங்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. மேலும், உடலில் உள்ள கால்சியம் அளவை இது சீராக வைத்து எலும்பின் அடர்த்தியை அதிகமாக்கும். இதனால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படாது. பெண்களுக்கும் இது மிகவும் உதவும்
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள் மற்றும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது ஆகும். இதனை நீங்கள் பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | இந்த 2 பொருட்களை மஞ்சள் நீரில் கலந்து குடித்தால் கொழுப்பு எல்லாம் கரைந்துவிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ