தசைகளை பாதிக்கும் வெயிட் லாஸ் மாத்திரைகள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

உடல் பருமனை குறைக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து 'தி லான்செட்' நாளிதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2024, 01:07 PM IST
  • எடையை குறைக்க, டயட், உடல் பயிற்சி என பல்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன.
  • இயற்கையாகவே உடல் எடையை குறைப்பது எளிதானது அல்ல.
  • மருந்துகளின் உதவியுடன் உடல் எடையை குறைப்பது தசைகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
தசைகளை பாதிக்கும் வெயிட் லாஸ் மாத்திரைகள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் title=

Side Effects of Weight Loss Medicines: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. எடையை குறைக்க, டயட், உடல் பயிற்சி என பல்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன. இயற்கையாகவே உடல் எடையை குறைப்பது எளிதானது அல்ல. சற்று சவாலான விஷயம் தான். அதற்கு விடாமுயற்சியும் பொறுமையும் தேவை. மேலும், பலன் தெரிய சிறிது அதிக காலம் ஆகலாம். எனவே, உடனடி பலனை பெற விரும்புபவர்கள் மத்தியில், எடை இழப்பு மருந்துகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. 

உடல் பருமனை குறைக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து 'தி லான்செட்' நாளிதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர். எடையை குறைக்க உதவும் மருந்துகளின் உதவியுடன் உடல் பருமனை குறைப்பது தசைகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் (Health Tips) என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பென்னிங்டன் பயோமெடிக்கல் ரிசர்ச் சென்டர் மற்றும் கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், உடல் பருமனை குறைக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து மேற்கொண்ட ஆய்வில், எடையை குறைக்கும் மாத்திரைகளை பயன்படுத்தும் போது, 36 முதல் 72 வாரங்களில் மொத்த தசை வெகுஜனத்தில் 25 முதல் 39 சதவீதம் வரை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.

தசை நிறை குறையும் போது உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகள்

தசை நிறை குறைவது உடல் வலிமை மற்றும் செயல்திறனை நேரிடையாக பாதிக்கிறது. இதனால், நமது செயல்திறன் முற்றிமுமாக பாதிக்கப்படும். மேலும், வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, உடல் எடை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் வெயிட் லாஸ் மாத்திரைகள்

உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் நிலையில், தசை நிறை குறைவதால் தசைகள் பலவீனமடையும் என்பதோடு, இதனால் இதய நோய் மட்டுமல்லாது, சில சமயங்களி இறப்பு ஏற்படும் ஆபத்தையும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும்... புரதம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்!

 கடுமையான நோய்களின் ஆபத்து

எடை இழப்பு மருந்துகள் உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளது தான். ஆனால் அவை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அதிகரிக்கின்றன. அதுமட்டுமின்றி, இதன் பயன்பாடு தசைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எடை இழப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டியவை

உடல் எடையை குறைக்க மருந்துகளுடன்,போதுமான புரத உணவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதோடு, வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். இது எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், தசை நிறையை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். அதோடு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்வதும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News