அதிகரிக்கும் டெங்கு - உஷார் மக்களே...

தலைநகர் டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் (12 நாள்கள்) மொத்தம் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 12, 2022, 09:05 PM IST
  • இந்தாண்டில் மொத்தமாக டெல்லியில் 295 பேருக்கு டெங்கு
  • ஆக்ஸ்ட் மாதத்தில் மட்டும் 75 பேருக்கு டெங்கு
  • நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை.
அதிகரிக்கும் டெங்கு - உஷார் மக்களே... title=

மழைக்காலம் வந்தாலே அத்துடன் நோய்களும் சேர்ந்து வருவது வாடிக்கைதான். டெங்கு, சிக்குன்குனியா போன்றவை அதிகமாக இக்காலகட்டத்தில் பரவும். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வருவதாக தெரிவிகக்கப்பட்டுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்ற மாதத்தில் மொத்தமாக 75 டெங்கு காய்ச்சலே பதிவாகியிருந்தது. 

மழைக்காலம் அதிமாகியிருப்பதால் காய்ச்சலின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முழுவதும், டெல்லியில் 295 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக டெங்கு காய்ச்சல் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை

டெங்கு மட்டுமின்றி மலேரியா, சிக்குன்குனியா ஆகிய நோய்களும் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை 63 பேருக்கு மலேரியாவும், 14 பேருக்கு சிக்குன்குனியாவும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 14 பேருக்கு மலேரியா ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மழை சார்ந்த நோய்களும் அதிமாக காணப்படுகிறது. கொசு ஒழிப்பு, சுகாதார முன்னெடுப்பு ஆகியவற்றை மாநில அரசுகள் செய்து வருகின்றன. 

மக்களும் குடியிருப்புகளின் அருகே நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளும்படியும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு தடுப்பு சார்ந்த விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இந்த 3 அறிகுறிகள் கண்களில் தோன்றும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News