குளிர்காலத்தில் உடலின் மந்தமான தன்மையால், நமது எடை திடீரென அதிகரிக்கத் தொடங்குகிறது. குளிர் காலத்தில், அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்துவதில் சில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை உங்கள் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொப்பையை வேகமாகக் குறைக்கும்.
கேரட்- நார்ச்சத்து நிறைந்த கேரட்டை உடலுக்கு எளிதில் ஜீரணிக்க முடியாது. சாப்பிட்ட பிறகு மணிக்கணக்கில் பசி எடுக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம். இயற்கையாகவே, ஒரு நபர் பசியை உணரவில்லை என்றால், அவரது எடை இழப்பு கண்டிப்பாக நடக்கும். இரண்டாவதாக, கேரட்டில் (Carrot Benefits) கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால் உங்கள் எடை அதிகரிக்காமல் (Weight Loss Tips) இருக்கும்.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
பீட்ரூட்- எடை இழப்புக்கு உகந்த நார்ச்சத்து பீட்ரூட்டில் காணப்படுகிறது. 100 கிராம் பீட்ரூட்டில் 43 கலோரிகள் மற்றும் 10 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒரு நபரின் எடையை விரைவாக அதிகரிக்காமல் இருக்கக்கூடும்.
இலவங்கப்பட்டை - சமையலறையில் இருக்கும் இலவங்கப்பட்டை குளிர்காலத்தில் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸ் அண்ட் வைட்டமினாலஜியின் படி, இலவங்கப்பட்டையில் காணப்படும் சின்னமால்டிஹைட் கொழுப்பு நிறைந்த குடல் திசுக்களின் வளர்சிதை மாற்றத்தை சமன் செய்கிறது. இது இன்சுலினையும் கட்டுப்படுத்துகிறது.
வெந்தய விதைகள்- வெந்தய விதைகள் குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்கும் சக்தி வாய்ந்த மருந்தாகும். வெந்தய விதைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். எனவே இது உங்கள் எடையை குறைக்க உதவும்.
கொய்யா - குளிர்காலத்தில் கிடைக்கும் சுவையான கொய்யா ஒரு மனிதனின் பசியை மணிக்கணக்கில் கட்டுக்குள் வைத்திருக்கும். இது உங்கள் உடலுக்குத் தேவையான தினசரி நார்ச்சத்தின் 12 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும். இந்த பழம் மனித வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு நல்ல வளர்சிதை மாற்றம் ஒரு நபருக்கு எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
தண்ணீர் - குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பட்ட குறைப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படுத்துகிறது. நீரிழப்பு காரணமாக, வளர்சிதை மாற்ற அமைப்பு மோசமான விளைவைக் கொண்டிருக்கிறது. இந்த பருவத்தில், சூடான நீர் அல்லது தேநீர் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR