Fennel Benefits: கண் பார்வை திறனை அதிகரிக்கும் பெருஞ்சீரகம் தண்ணீர்

பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 10:09 PM IST
Fennel Benefits: கண் பார்வை திறனை அதிகரிக்கும் பெருஞ்சீரகம் தண்ணீர் title=

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்பது (Fennel) போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது. இந்த பெருஞ்சீரக விதைகளின் பயன்கள் ஏராளம். பல்வேறு தரப்பட்ட மக்களும் இதை பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த பெருஞ்சீரகமானது (Fennel) சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெருஞ்சீரக விதைகளில் நிறைய தாதுக்கள் உள்ளன. இப்படி ஏகப்பட்ட நன்மைகளைத் தரும் பெருஞ்சீரக விதைகளை பற்றி காண்போம்.

ALSO READ | பல நோய்களுக்கு எமனாகும் Mouth Freshener பற்றித் தெரியுமா?

1. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
பெருஞ்சீரக விதைகளை மெல்லுதல் உமிழ்நீரின் நைட்ரைட்டின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்த (Blood Pressure) அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

2. ​சரும பிரச்சனைகளை தீர்க்கும்
பெருஞ்சீரகம் விதைகள் முகப்பருவை குணப்படுத்தும். உங்கள் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை பராமரிக்கவும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் இந்த தாதுக்கள் மிக முக்கியமானவை. இந்த தாதுக்கள் சருமத்தில் குளிர்ச்சியான விளைவை அளிக்கின்றன. இது சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் உள்ள தாதுக்களை நம்முடைய சருமம் உறிஞ்ச முடியும். எனவே இதை பேஸ்ட் செய்து சருமத்திற்கு தடவி வரலாம்.

3. ​கண் பார்வை திறனை அதிகரிக்கும்
பெருஞ்சீரகம் விதைகள் கண்பார்வை மேம்படுத்த உதவுகிறது. எனவே உங்கள் உணவில் பெருஞ்சீரக விதைகளை எடுத்து வருவது பார்வை திறனை அதிகரிக்க உதவும். இதில் விட்டமின் ஏ அதிகளவில் காணப்படுவது கண் பார்வைக்கு நல்லது. 

4. பசியைப் போக்கும்
பெருஞ்சீரகம் தேநீர் தவறாமல் குடிப்பது உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீர் பாதை நோய்களுக்கான வாய்ப்புகளை குறைக்கவும், சிறுநீரகத்தில் இருந்து நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது. 

5. உடல் எடையை குறைக்க உதவும்
இந்த சிறிய விதைகளில் உடல் எடையை குறைக்க கூடிய சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. நார்ச்சத்துக்கள் இருப்பது உணவை சீரணிக்கவும், கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது. பசி அடிக்கடி எடுக்காது. 

ALSO READ | Blood Pressure நோயாளிகளுக்கு கொரோனா அபாயம் அதிகம்: பாதுகாப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News