உணவின் முடிவில் இனிப்பு உண்டாலே உணவு உண்ட திருப்தி ஏற்படுகின்றது. பலருக்கு இனிப்பு இல்லாமல் இருக்கவே முடியாது. சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும்.
அரிசியில் உள்ள ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக செய்து சாப்பிடலாம்.
சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும். ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.