தற்போதைய காலகட்டத்தில் நம்மில் பலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவது சகஜமாகி வருகிறது. இதற்கு நமது வாழ்க்கை முறைகள் உணவு முறைகள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நோயும் வராமல் தடுக்க தினமும் நாம் இரவில் ஒரு விஷயத்தை சாப்பிட வேண்டியிருக்கிறது. அது என்ன தெரியுமா?
வெற்றிலை நன்மைகள்:
வெற்றிலையை பான் நிறைகள் என்றும் அழைப்பர். ஆயுர்வேதக் கூற்றுகளின் படி தினமும் வெற்றிலையை சாப்பிடுவது ஆரோக்கிய நன்மைகளை உடலில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதுவும், இன்னமும் இரவு உணவிற்கு பின்பு வெற்றிடையே நின்று சாப்பிட வேண்டுமாம். இது பழங்கால நடைமுறைகளில் இருந்ததாகவும், சமூகம் மேம்பட்ட பிறகு இந்த வழக்கம் தற்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
செரிமானத்தை மேம்படுத்தும்:
ஒரு சிலருக்கு மிகவும் மென்மையான வயிறு இருக்கும். இதனால் அவர்கள் செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுவர். அப்படிப்பட்ட பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் இரவு நேர உணவுக்கு பின்னர் வெற்றிலையை சாப்பிடலாம். இதில் வயிறை சாந்தப்படுத்தக்கூடிய அத்தியாவசிய எண்ணெய்கள் நிறம் இருப்பதாக கூறப்படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அமிலம் சுரப்பதையும் தவிர்க்கிறது.
வாய்வழி சுகாதாரம்:
வெற்றிலையில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வாய்வழி தொற்றுகளை நீக்குவதற்கும் சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் வெற்றிலையும் வெல்லலாம். ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி இரவு உணவு முடித்த பின்பு வெற்றிலை சாப்பிடுவது சுவாசத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும் என்றும் இரு நோய் பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் பதட்டம்:
பலருக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை எப்படி கையாள்வது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்கள் வெற்றிலையை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. வெற்றிலையை மெல்லுவது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. தூக்கத்தை ஊக்குவிக்க, மன அழுத்தத்தை குறைக்க, நரம்பு மண்டலத்தை பாதுகாக்க வெற்றிலையை மெல்லலாம்.
நச்சுக்களை நீக்கும்:
பெரும்பாலானோருக்கு நோய்வாய் படுவதற்கு காரணமாக இருப்பது உடலில் உள்ள நச்சுகளாக இருக்கும். இதை தினமும் உணவிற்கு பின்னால் வேண்டுவதால் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறுவதாக ஆயுர்வேத மருத்துவத்தை கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
சுவாச ஆரோக்கியம்:
வெற்றிலையில் கசிவு நீக்கும் பண்புகள் உள்ளதால் அது சுவாச நோய் பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று கூறப்படுகிறது. சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், இருக்குன்னு சுவாசக் குழாய்கள் அடைப்பு போன்றவற்றை வெற்றிலையை மெல்லுவது நீக்குகிறது.
வளர்ச்சிதை மாற்றம்:
உடல் வளர்ச்சிக்கும், சரியான எடையை பராமரிப்பதற்கும் வளர்ச்சிதை மாற்றம் பெரிய பங்கு வகிக்கிறது. இதை மேம்படுத்த வெற்றிலை உதவும். வெற்றிலை சாப்பிடுவதால் ஊட்டச்சத்தை ஏற்றுக்கொள்ளவும் உடலை தயார்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ