வெயிட் லாஸ் முதல் நீர்ச்சத்து வரை…இளநீர் குடித்தால் உடலில் ஏற்படும் மேஜிக்..!

இளநீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் மகத்துவங்களையும் தெெரிந்து கொள்வோம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Aug 25, 2023, 12:16 PM IST
  • இளநீர் குடுப்பதால் கொழுப்பு குறையும்.
  • இளநீர் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும்.
  • நாள்பட்ட நோய்களை தடுக்க தேங்காய் நீர் மற்றும் இளநீர் ஆகியவை உதவும்.
வெயிட் லாஸ் முதல் நீர்ச்சத்து வரை…இளநீர் குடித்தால் உடலில் ஏற்படும் மேஜிக்..!  title=

மிகவும் குறைவாக மதிப்பிடப்படும் இயற்கை பானங்களுள் இளநீரும் ஒன்று.  ஆனால் இந்த அதிசய பானம் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் சிறந்தது. இளநீர் குடிப்பதால் உடலில் பல மேஜிக் நிகழ்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

நீர்சத்து:

இளநீீர், சிறந்த இயற்கை பானங்களுள் ஒன்று. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பிற மாற்றங்களை உண்டாக்கவும் இளநீர் உதவுகிறது. இதை எலெக்ட்ரோலைட்ஸ் என்று கூறுவார்கள். இதுதான் நம் உடலில் உள்ள பாகங்கள் சரியாக செயல்பட உதவுகிறது. இந்த எலெக்ட்ரோலைட்ஸை அதிகரிக்க உதவும் பானங்களுள் ஒன்று, இளநீர்.  இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இது வியர்வை மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை திரும்ப உதவுகிறது. இது உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது வெப்பமான காலநிலையின் போது உடலில் மீண்டும் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | 1 மாதத்தில் பற்கள் முத்து போல் பளபளக்கும், இதை மட்டும் செய்யுங்கள்

கெட்ட ஆக்ஸிடன்ஸை வெளியேற்றுகிறது..

இளநீரில் கெட்ட ஆக்ஸிடண்ட்ஸை வெளியேறும் சக்தி நிறைந்துள்ளது. உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் சக்தி இளநீரில் உள்ளதால் இதை குடிப்பது உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும். இளநீர் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் சிறந்தது. புற்றுநோய், அல்சைமர், இருதய கோளாறு, ஸ்ட்ரோக் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இளநீர் பருகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இளநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவதாகவும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

செரிமானத்திற்கு உதவுகிறது..

இளநீர் மற்றும் தேங்காய் நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. கனமான உணவுகளை சாப்பிட்டாலும் அதன் பிறகு இளநீர் அல்லது தேங்காய் நீர் குடித்தாலும் அந்த உணவு எளிதில் செரிமானம் ஆகி விடும். அடிக்கடி செரிமான கோளாறுகளால் அவதிப்படுவோருக்கு தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீர்  உதவியாக இருக்கும்.

கலோரிகளின் அளவு குறைவு: 

பிற பானங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீரில் கொழுப்பின் அளவு குறைவாகவே இருக்கும். சோடா அல்லது பிற இயறகை பழ பானங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். ஆனால், இளநீர் அதிலிருந்து மாறுபட்டது. தாகத்தை தனிக்கவும் உடலின் சர்க்கரை அளவை ஒரே அளவில் வைத்திருக்கவும் இளநீர் உதவும். அதனால், உடல் எடையை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக இளநீரை அவர்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம். 

எலும்புக்கு வலு:

தேங்காய் நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது, இவை இரண்டும் எலும்புகளை பராமரிக்கவும் அதை வலுவானதாக மாற்றவும் உதவுகிறது. இளநீர் குடித்தால் எலும்பு தேய்மான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் குடித்து வருவது எலும்புக்கு நல்லது. இதை உங்கள் டயட் உடன் எடுத்துக்கொண்டால் இன்னும் நல்லது. 

இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும்..

தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீரில் உள்ள பொட்டாசியம் நம் உடலில் உள்ள சோடியத்தின் எதிர்மறையான விளைவுகளை எதிர்த்து போராடும் சத்துக்களை அதிகரிக்கிறது. இது, உடலின்  இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இளநீர் மற்றும் தேங்காய் நீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் குறைந்த இரத்த அழுத்த அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டையும் ஏற்பட விடாமல் தடுக்கிறது. 

மேலும் படிக்க | விந்தணு குறைபாடு முதல் நீரிழிவு வரை... நன்மைகள் ஏராளம் கொண்ட பூசணி விதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News